வெளிவர இருக்கிற மக்கள் திலகம் பற்றிய பொக்கிஷம்!

ஜனவரி – 17.  மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் 105 ஆவது பிறந்த நாளையொட்டி பல தலைவர்களின் அறிக்கைகளும் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

அவருடைய கோடிக்கணக்கான தொண்டர்களும், உலகளாவிய ரசிகர்களும் கொண்டாடுகிறபடி மக்கள் திலகத்தைப் பற்றிய பொக்கிஷத்தைப் போன்ற புத்தகத்தைக் கொண்டு வந்திருக்கிறார் முனைவர் குமார் ராஜேந்திரன்.

மக்கள் திலகத்தின் உறவினரான வழக்கறிஞர் குமார் ராஜேந்திரனே நூலைத் தொகுத்திருப்பது ரொம்பவும் சிறப்பு.

அவருடைய மகத்தான அனுபவங்களுடன் துவங்குகிறது புத்தகம்.

புத்தகத்தின் தலைப்பே – “எம்.ஜி.ஆர்” தான்.

இலங்கை கண்டியில் அவருடைய பிறப்பு துவங்கி, கும்பகோணம் நாடக வாழ்க்கை, திரைத்துறையில் அவர் எடுத்துக் கொண்ட தொடர் முயற்சிகளுக்குப் பிறகு அவருக்குக் கிடைத்த மிகப்பெரும் வெற்றி, கதர்ச் சட்டையுடன் காங்கிரஸ் உணர்வாளராக இருந்த அவர்,

அறிஞர் அண்ணாவின் அறிமுகம் கிடைத்த பிறகு திராவிட இயக்கத்தின் முக்கியமான முகமாக மாறி, ஆட்சியைப் பிடித்தது முதல் தொண்டர்களின் நினைவுகளில் அவர் வாழ ஆரம்பித்தது வரை எல்லாச் செய்திகளும் நூலில் பதிவாகி இருக்கின்றன.

திருமதி ஜானகி அம்மையார் துவங்கித் திரைத்துறையில், அரசியலில் அவருக்கு நெருக்கமானவர்களின் அனுபவங்கள், மக்கள் திலகத்தின் பேச்சுகள், எழுத்துக்கள், பாடல்கள், திரைத்துறை வசனங்கள் –

இவற்றுடன் ‘சதிலீவாவதி’யிலிருந்து ‘மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன்’ வரை அனைத்துத் திரைப்படங்களின் புகைப்படங்கள், புரட்சித் தலைவரைப் பற்றி இதுவரை வெளிவந்துள்ள முக்கியமான புத்தகங்களைப் பற்றிய குறிப்புகள், அவருடைய அபூர்வமான புகைப்படங்கள் என்று எல்லாமே வண்ணமயம்.

800 பக்கங்களைக் கொண்ட அழகான இந்தப் புத்தக்கத்தைச் சிறப்பான வடிவமைப்பில் வெளிக்கொண்டு வந்திருக்கிறது புத்தக விற்பனையில் உலகளாவிய தொடர்பைக் கொண்டிருக்கும் பிரபல @மெரினாபுக்ஸ் (www.marinabooks.com) நிறுவனம்.

எம்.ஜி.ஆரைப் பற்றி நிறையவே புத்தகங்கள் வந்திருந்தாலும், இந்தப் புத்தகம் தனிச்சிறப்பு என்பதை இந்த நூலை வாசிக்கிறபோது உணர முடியும்.

இந்தப் புத்தகம் மிக விரைவில் வெளியிடப்பட இருக்கிறது.

விபரங்களுக்கு;
மெரினா புக்ஸ்,
1A, திருநாத முதலி நகர்,
தரணி காம்ப்ளக்ஸ்,
திருப்பத்தூர் (மா) – 635 601
அலைபேசி: 88834 88866 / 75400 09515
மின்னஞ்சல்: contactus@marinabooks.com

Bookscinema
Comments (0)
Add Comment