– முதல் வாரத்தில் 33 சதவீதம் உயர்வு
இந்தியாவின் ஏற்றுமதி இம்மாதத்தின் முதல் வாரத்தில் 33 சதவீதம் அதிகரித்திருப்பதாக மத்திய வர்த்தகத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இது குறித்து தகவலளித்துள்ள அமைச்சகம் நாட்டின் ஏற்றுமதி இந்த மாதத்தின் முதல் வாரத்தில் 33.16 சதவீதம் அதிகரித்து 56,462 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.
“கடந்த ஆண்டு இதே காலத்தில் ஏற்றுமதி 42,402 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
மதிப்பீட்டுக் காலத்தில் பொறியியல் பொருட்கள், பெட்ரோலிய பொருட்கள், நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள் ஆகியவை அதிகளவில் ஏற்றுமதி ஆகியுள்ளதை அடுத்து, இந்த உயர்வு எட்டப்பட்டுள்ளது.
ஏற்றுமதியைப் போலவே, இறக்குமதியும் இக்காலக்கட்டத்தில் அதிகரித்துள்ளது. நாட்டின் இறக்குமதி, கிட்டத்தட்ட 33 சதவீதம் அதிகரித்து 85,840 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
கடந்த ஆண்டு இதே காலத்தில் 65 ஆயிரம் கோடி ரூபாயாக இது இருந்தது. நடப்பு நிதியாண்டில், ஏற்றுமதி இலக்கான 30 லட்சம் கோடி ரூபாய் என்பதை உறுதியாக எட்ட இயலும்” என்று மத்திய அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது.