சளி, இருமல் இருந்தாலே கொரோனா பரிசோதனை கட்டாயம்!

– புதிய வழிகாட்டு நெறிமுறைகளை அறிவித்த சுகாதாரத்துறை

தமிழகத்தில் பொதுமக்களுக்கு சளி, இருமல் இருந்தாலே கொரோனா பரிசோதனை கட்டாயம் மேற்கொள்ள வேண்டும் என சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் செல்வவிநாயகம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள புதிய வழிகாட்டு நெறிமுறையில்,

“தமிழகத்தில் காய்ச்சல், சளி, இருமல், மூச்சுத்திணறல், உடல் வலி உள்ளிட்ட அறிகுறிகள் உள்ளவர்களுக்கு கட்டாயம் கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும்.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு இதுபோன்ற அறிகுறிகள் இருந்தால் அவர்களும் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.

கொரோனா அறிகுறிகள் இல்லாவிட்டாலும் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் 60 வயதுக்கு மேற்பட்டவர்களாகவோ, இணை நோய்கள் உள்ளவர்களாகவோ இருந்தால் கட்டாயம் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.

கர்ப்பிணிகள், மாற்றுத்திறனாளிகள், நோய் எதிர்ப்பு சக்தி குறைவானவர்களும் ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை செய்ய வேண்டும்.

வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் மற்றும் கொரோனா சிகிச்சை மையங்களில் உள்ளவர்களுக்கு தொடர்ந்து 3 நாட்கள் காய்ச்சல் இல்லாமலும், அறிகுறிகள் தெரிந்து அல்லது கொரோனா உறுதி செய்யப்பட்டு 7 நாட்கள் முடிவுற்று எந்த ஒரு பாதிப்பு இல்லாமல் இருந்தால் வீட்டு தனிமையை நிறைவு செய்து கொள்ளலாம்.

வீட்டு தனிமையை நிறைவு செய்தவர்கள் மீண்டும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள தேவையில்லை” எனக் கூறப்பட்டுள்ளது.

Comments (0)
Add Comment