நன்றியுணர்வு உள்ளவர்கள் எல்லாம்…!

நினைவில் நிற்கும் வரிகள்:

***

ஒரே ஒரு ஊரிலே ஒரே ஒரு ராஜா
ஒரே ஒரு ராஜாவுக்கு ஒரே ஒரு ராணி
ஒரே ஒரு ராணி பெற்றாள் ஒன்பது பிள்ளை
அந்த ஒன்பதிலே ஒன்றுக் கூட உருப்படி இல்லை

(ஒரே ஒரு…)

படிச்சிருந்தும் தந்தை தாயை
மதிக்க மறந்தான்
ஒருவன் படுக்கையிலே முள்ளை வைத்து
பார்த்து மகிழ்ந்தான்

பிடிச்ச முயல் அத்தனைக்கும்
மூன்று கால் என்றான்
ஒருவன் பெண்டாட்டியின் கால்களுக்கு
காவல் இருந்தான்

(ஒரே ஒரு…)

பிள்ளை பெற்ற ராஜா ஒரு நாயை வளர்த்தார்
அதை பிள்ளைக்கு மேல் கண்களைப் போல்
காத்து வளர்த்தார்

உண்மை அன்பு சேவை என்ற
மூன்றும் கொடுத்தார்
அதன் உள்ளத்திலே வீடு கட்டி
தானும் இருந்தார்

(ஒரே ஒரு…)

சொந்தமென்று வந்ததெல்லாம்
சொந்தமும் இல்லை
ஒரு துணை இல்லாமல் வந்தததெல்லாம்
பாரமும் இல்லை

நன்றி உள்ள உயிர்களெல்லாம்
பிள்ளை தானாடா – தம்பி

நன்றி கெட்ட மகனைவிட
நாய்கள் மேலடா

(ஒரே ஒரு…)

– 1960-ம் ஆண்டு நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடிப்பில் வெளிவந்த ‘படிக்காத மேதை‘ திரைப்படத்தில் இடம்பெற்ற இப்பாடல் வரிகளை எழுதியவர் கவியரசர் கண்ணதாசன். இசை  -கே.வி.மகாதேவன். பாடியவர் – டி.எம்.சௌந்திர ராஜன், சூலமங்கலம் ராஜலெட்சுமி

Comments (0)
Add Comment