1. நிரந்தர வருமானம் உள்ளவர்களுக்கு எந்தக் கவலையும் இல்லை. உழைக்கும் மக்களின் வாழ்வாதார இழப்பை எந்த அரசும் ஈடு செய்ய முடியாது. ஊரடங்கு அவர்களின் தலை மேல் வைக்கும் பாறாங்கல்!
2. இரவு நேரங்களிலும் ஞாயிற்றுக் கிழமைகளிலும் ஊரடங்கு, பல நாள் ஊரடங்கிற்கான முன்னோட்டம் என்றே கருதப்படுகிறது. மீண்டும் மீண்டும் ஊரடங்கை முன்னிறுத்துவது ஆட்சியியல் குறைபாட்டையே காண்பிக்கிறது.
இன்னும் எத்தனை வருடங்களுக்கு ஊரடங்கைத் தீர்வாக முன்னிறுத்துவீர்கள்?
இரண்டு வருடமாக அரசு இன்னும் தயாராகவில்லை, மக்களைத் தயார்ப்படுத்தவில்லையெனில் இனிமேல் தயாராகும் என்பதற்கு என்ன உத்தரவாதம்?
3. தடுப்பூசியைப் போட்டுக் கொண்டவர்களுக்குப் பெரிதாக பாதிப்பு இருக்காது என்ற அரசின் வாதம் உண்மையானால், ஊரடங்கு எதற்கு?
அரசின் புள்ளி விவரங்கள் படி மாநிலத்தில் 58% பேர் குறைந்தது 1 தவணை தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர்.
4. கொரோனா சிகிச்சையில் சித்த மருந்துகள் நல்ல பலனைத் தந்தன எனப் பல மருத்துவர்கள் கூறிய பிறகும், அது குறித்து ஏன் தொடர் அக்கறை காட்டவில்லை? ஆரம்ப விளம்பரங்களுக்குப் பிறகு அதைக் கிடப்பில் போட்டது ஏன்? தடுப்பூசிகளை மட்டும் தொடர்ந்து பரப்புரை செய்வது ஏன்?
5. தடுப்பூசி கட்டாயமல்ல என்ற சட்டநிலை இருக்கும் போது, வரிந்து கட்டிக் கொண்டு தடுப்பூசியைத் திணிப்பது ஏன்?
6. தடுப்பூசியின் பின் விளைவுகளுக்கோ, ஊரடங்கால் முடக்கப்படும் வாழ்வாதாரத்திற்கோ அரசு பொறுப்பெடுத்துக் கொள்ளாது எனில், அரசு சொல்வதைக் கேட்க வேண்டிய தேவையென்ன?
7. நல்ல வாழ்வியல் முறை, நல்ல உணவு எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் முறையென்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம். அதுவல்லவா பரப்புரையாக வேண்டும்?
– நன்றி: சரவணன் கருணாநிதி முகநூல் பதிவு