அருமை நிழல்:
மெல்லிசை மன்னர்கள் என்று திரை உலகில் பரவலாக அழைக்கப்படும் விஸ்வநாதன்-ராமமூர்த்தி ஜோடியும், கவிஞர் கண்ணதாசனும், நடிகர் திலகம் சிவாஜி கணேசனும் இணைந்து கைகோர்த்த திரைப்பட பாடல்கள் பெரும் வெற்றியைப் பெற்றிருக்கின்றன.
இயக்குனர் பீம்சிங்கின் படங்களே அதற்கு ஓர் உதாரணம்.
தமிழ்த் திரையிசை உலகில் எம்.எஸ்.விஸ்வநாதனும் ராமமூர்த்தியும் கொடிகட்டிப் பறந்து கொண்டிருந்தனர்.
அப்போது அவர்களுக்கு ‘மெல்லிசை மன்னர்கள்’ பட்டத்தை வழங்கியவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன்.
மெல்லிசை மன்னர்களை சிவாஜி வாழ்த்த அருகிலிருந்து புன்னகையுடன் அதை ரசித்துக் கொண்டிருக்கிறார் கவியரசர் கண்ணதாசன்.