லேரி எல்லிசனின் நம்பிக்கை மொழிகள்:
அமெரிக்காவின் பிரபல தொழிலதிபரான லேரி எல்லிசன். ஆரக்கிள் கார்ப்பரேஷனின் இணை நிறுவனர் மற்றும் சிஇஓ. 2014 ஆம் ஆண்டு போர்ப்ஸ் பத்திரிகை அமெரிக்காவின் மூன்றாவது மிகப்பெரிய பணக்காரர் என்று அழைத்துள்ளது.
அவரது சில நம்பிக்கை மொழிகள்…!
மிகப்பெரிய சாதனையாளர்கள் வெற்றிகளால் உற்சாகமடைகிறவர்கள் அல்ல. தோல்வியின் பயத்தால் உத்வேகம் பெற்றவர்கள்.
உங்களுக்கு என்ன தேவை என்பதைவிட என்ன செய்யப்போகிறீர்கள் என்பதை நீங்கள் நம்பவேண்டும்.
ஒரு நிறுவனத்தின் அடிப்படை குறிக்கோள் என்பது பணத்தை ஈட்டுவது. அரசின் அடிப்படை குறிக்கோள் என்பது அந்தப் பணத்தின் ஒரு பகுதியை மற்றவர்களுக்கு பகிர்ந்து அளிப்பது.
வாழ்க்கை ஒரு பயணம். அது எல்லைகளைக் கண்டறிவது பற்றிய ஒரு பயணம்.
குழந்தைகளுக்கு கணிதப் புதிர்களை செய்வதுபோலத்தான் ஆரக்கிளை கட்டமைத்தோம்.
படகில் பயணிப்பதை நேசிக்கிறேன். வெற்றியடையும் தருணங்களில் அதை நான் மிகவும் விரும்புவேன்.
எனக்கு முதலில் வருவது மிகவும் முக்கியமானது.
வெற்றிக்குத் தேவையான அனைத்து வசதியின்மைகளும் என்னிடம் இருக்கின்றன.
அதாவது எளிமையான எங்களுடைய இலக்கு என்பது மின்னணு தொழில்களுக்கு முன்னோடியாக இருப்பது.
இன்றில் இருந்து ஐந்தாவது ஆண்டில் நான் எப்படி எப்படி சிந்திப்பேன் என்று எனக்குத் தெரியாது.
நீங்கள் செயல்பட்டாக வேண்டும். இப்போதே செயல்படவேண்டும்.
ஆரக்கிளில் என்னுடைய பணி இதுதான். உலகின் இரண்டாவது பெரிய மென்பொருள் நிறுவனத்தை முதலிடம் பெறவைப்பது. போட்டியைத் தாண்டியும் அதனை சிறப்பானதாக உருவாக்குவது.
உங்கள் வாழ்க்கையை வித்தியாசமான வழிகளில் வாழத் தொடங்கும்போது, உங்களைச் சுற்றியுள்ளவர்கள் அசெளகரியமாகக் கருதுவார்கள். நீங்கள் என்ன செய்யப்போகிறீர்கள் என்று அவர்களுக்குத் தெரியாது.
நான் எப்போதுமே வெற்றியைப் பற்றி மட்டுமே சிந்தித்துக் கொண்டிருப்பவன். அமெரிக்காவின் வெற்றிக் கோப்பையைப் பெற விரும்புகிறேன்.
ஆரக்கிள் உலகின் நம்பர் ஒன் மென்பொருள் நிறுவனமாக மாறவேண்டும் என விரும்புகிறேன். இப்போதும் நான் மைக்ரோசாப்ட்டை வெல்லமுடியும் என உறுதியமாக நம்புகிறேன்.
பங்குச்சந்தையில் உங்கள் முதலீடுகள் சரிவைச் சந்திப்பதால் கவலைப்படாதீர்கள். இடிந்துபோய்விடாதீர்கள். எல்லாமும் உங்களால் முடியும். உங்களால் முடியும்.
எப்போதுமே நான் தொழிலைப் பற்றியே யோசித்துக்கொண்டிருக்கிறேன். ஆனால் எல்லா நேரங்களிலும் அல்ல.
விடுமுறையைக் கழிக்கும்போது, படகில் பயணிக்கும்போது, இமெயிலில் இருக்கும்போதெல்லாம் என் போட்டியாளர்கள் என்ன செய்துகொண்டிருப்பார்கள் என்று யோசித்துக்கொண்டிருப்பேன்.
ஏதாவது செய்ய விரும்புகிறேன். அது முழுவதுமாக சொந்தமான கண்டிபிடிப்பு தொடர்பானது.
– தொகுப்பு தான்யா
30.12.2021 10 : 50 A.M