35 லட்சம் பேருக்கு நகைக்கடன் தள்ளுபடி இல்லை! 

கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் வாங்கிய 48 லட்சம் பேரில், 35 லட்சம் பேரின் கடன்கள் தள்ளுபடி செய்யப்படாது என கூட்டுறவுத்துறை அறிவித்துள்ளது.

கூட்டுறவு வங்கிகளில் ஏராளமானோர் நகைக்கடன் வாங்கியிருந்த நிலையில், தள்ளுபடி செய்யப்படும் என்ற எதிர்பார்த்தனர்.

நகைக்கடன் குறித்து தமிழகம் முழுவதும் உள்ள கூட்டுறவு வங்கிகளில் கூட்டுறவுத்துறை ஆய்வு மேற்கொண்டது.

அதன் அடிப்படையில், நகைக்கடன் தள்ளுபடிக்கான புதிய நிபந்தனைகள் மற்றும் பட்டியலையும் கூட்டுறவுத்துறை வெளியிட்டுள்ளது.

அதன்படி,

*நகைக் கடனை முழுமையாக செலுத்தியவர்களுக்கு தள்ளுபடி கிடையாது.

*40 கிராமுக்கு மேல் ஒரு கிராம் அதிகம் வைத்திருந்தாலும், தள்ளுபடி கிடையாது.

*அரசு ஊழியர்கள், அவர்களது குடும்பத்தினர், கூட்டுறவு சங்கத்தில் பணிபுரிபவர்களுக்கும் நகைக்கடன் தள்ளுபடி கிடையாது.

*ஆதார் எண்ணை தவறாக வழங்கியவர்கள், ரேசன் அட்டை வழங்காதவர்கள், வெள்ளை அட்டை உடையவர்களுக்கும் நகைக்கடன் தள்ளுபடி இல்லை.

*பொங்கலுக்கு முன்பு, அரசு விழாவில் தகுதியான 25 சதவீதம் பேருக்கு நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டு நகைகள் வழங்கப்படும்.

*இதன் மூலம், நகைக்கடன் பெற்ற 48,84,726 பேரில் 35,37,693 பேரின் நகைக்கடன்கள் தள்ளுபடி செய்யப்படாது என கூட்டுறுவுத்துறை தெரிவித்துள்ளது.

29.12.2021 12 : 30 P.M

Comments (0)
Add Comment