‘காகித பூக்கள்’ படத்தை சக்திவேல் சினி கிரியேஷன் சார்பில் எஸ்.முத்து மாணிக்கம் தயாரித்து எழுதி இயக்கியுள்ளார்.
லோகன் மாணிக், பிரியதர்ஷினி, ‘அப்புச்சி கிராமம்’ பிரவீன் குமார், தவசி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
சிவபாஸ்கர் ஒளிப்பதிவு செய்ய, ‘ஓடு ராஜா ஓடு’ படத்தின் இசை அமைப்பாளர் தோஸ் நந்தா இசை அமைத்துள்ளார்.
கார்த்திக் நேத்தா, கவி பாஸ்கர், தமிழாங்கன், பாக்கியம் சங்கர் பாடல்கள் எழுதியுள்ளனர்.
இந்தப்படத்தின் இயக்குனர் முத்து மாணிக்கம் இந்தப் படத்தை இயக்கியுள்ளதை பார்க்கும்போது அறிமுக இயக்குனர் இயக்கிய படம் என்கிற உணர்வே ஏற்படாது.
தாகூர் சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த அறிமுக இயக்குனர் என இவருக்கு கொடுக்கப்பட்ட விருதே அவரது திறமைக்கு ஒரு சான்றாக அமைந்துள்ளது.
இந்தக் கதைக்கு பொருத்தமான நடிகர், நடிகையர்களை தேர்வு செய்து நடிக்க வைத்துள்ளனர். இந்தப் படத்தின் சிறப்பம்சமாக இந்தப் படத்தின் இசையும் பாடல்களும் அமைந்துள்ளது.
இதுவரை பல சர்வதேச திரைப்பட விழாக்களில் கலந்துகொண்டு 9 விருதுகளை பெற்றுள்ள இந்தப்படம், குடும்பத்தினர் அனைவரும் பார்த்து ரசிக்கும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளது.
படம் குறித்து இயக்குனர் கூறுகையில், ‘குடியாலும், பொறுப்பின்மையாலும் மனைவியைப் பிரிந்த கணவன், தவிர்க்க முடியாத நிலையில் தன் உயிரைப் பணயம் வைத்து மீண்டும் மனைவியுடன் இணைகிறான்.
வாய்ப்பு கிடைக்கும்போது அதை தவறவிட்டு விட்டால், மீண்டும் அந்த வாய்ப்பைப் பெற முடியாது என்ற கருத்தை மையப்படுத்தி படம் உருவாகியுள்ளது. குறிப்பாக இந்தப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சி படம் பார்த்துவிட்டு வெளியே வருபவர்கள் மனதில் ஒரு பாதிப்பை ஏற்படுத்தும் என்பது உறுதி.
படத்தைப் பற்றி சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால் பார்த்து ரசித்து விட்டு செல்பவர்களுக்கு இது ஒரு பொழுதுபோக்கு சித்திரம்.. சிந்திப்பவர்களுக்கு இது ஒரு பாடம் என்கிறார்.
இயக்குனர் முத்து மாணிக்கத்திற்கு தாகூர் சர்வதேச திரைப்பட விழாவில், சிறந்த அறிமுக இயக்குனருக்கான விருது கிடைத்துள்ளது.
28.12.2021 5 : 20 P.M