இன்னும் நிறைய பெருந்தொற்றுகள் வரும் – ஐ.நா. எச்சரிக்கை!

கொரோனா வைரஸ் கடந்த 2 ஆண்டு காலமாக உலக மக்களைத் தன் கைப்பிடிக்குள் வைத்துள்ளது. கொரோனா தொடங்கி உருமாறிய பல வைரஸ்கள் மக்களைத் தாக்கி உயிரைக் குடித்து வருகின்றன. தடுப்பூசி செலுத்தியும் வைரஸ் பரவல் பல நாடுகளில் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், தென்ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமிக்ரான் வைரஸ் பிற நாடுகளுக்கு வேகமாக பரவி வருகிறது. இந்தப் புதிய வகை வைரஸ் பரவும் நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு உலகம் முழுவதும் பல்வேறு கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ஐ.நா. பொதுச் செயலாளர் ஆன்டனியோ குட்டரஸ், “கொரோனா என்பது மனித இனம் சந்திக்கும் கடைசி பெருந்தொற்று அல்ல. கொரோனா போன்று இன்னும் நிறைய பெருத்தொற்றுகள் வரும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், “கொரோனாவைக் கட்டுப்படுத்த நாம் நடவடிக்கை எடுக்கும்போதே அடுத்த பெருந்தொற்றுக்கு தயாராக வேண்டும். உலகப் பெருந்தொற்று தயாராதல் தினத்தையொட்டி, இதில் நாம் கவனம் செலுத்துவோம்” என்றும் ஆன்டனியோ குட்டரஸ் பதிவிட்டுள்ளார்.

28.12.2021 1 : 30 P.M

Comments (0)
Add Comment