நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்தது ஏன்?

– அஜித் விளக்கம்

இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில், அஜித் முதல் முறையாக நடித்திருந்த ‘நேர்கொண்ட பார்வை’ திரைப்படம் கடந்த 2019-ம் ஆண்டு வெளியானது. இத்திரைப்படம் ஹிந்தியில் 2016-ம் ஆண்டு வெளியான ‘பிங்க்’ படத்தின் ரீமேக்காக எடுக்கப்பட்டிருந்தது.

‘பிங்க்’ படத்தில், நடிகர் அமிதாப்பச்சன் ஏற்று நடித்திருந்த வழக்கறிஞர் வேடத்தில் தான் நடிகர் அஜித் நடித்திருந்தார்.

நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத், அபிராமி வெங்கடாச்சலம், ஆண்ட்ரியா தரங், வித்யாபாலன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

எந்த ஒரு எதிர்மறையான விமர்சனங்களும் இல்லாமல், ரசிகர்களின் பாராட்டுகளைப் பெற்றது மட்டுமின்றி, பெண்களிடமும் நல்ல வரவேற்பைப் பெற்ற ‘நேர்கொண்ட பார்வை’ திரைப்படம் திரையரங்குகளில் வசூலிலும் சாதனை படைத்தது.

இந்நிலையில் இந்தப் படத்தில் நடித்தது ஏன் என அஜித் அளித்துள்ள விளக்கம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இதுகுறித்து அவர் அளித்த விளக்கத்தில், “என் மகள் இந்த சமூகத்தில் தான் வாழ போகிறாள். இந்த சமூகத்தில் வாழும் ஒரு ஆண், ஒரு பெண்ணை எப்படிப் பார்க்க வேண்டும் என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும்.

என்னுடைய படங்களில் பெரும்பாலும், வலிமையான பெண் கதாபாத்திரங்கள் இருந்தது இல்லை. ஒரு சமூகமாக நாம் உண்மையை பேசுவதற்கு பயப்படுகிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.

Comments (0)
Add Comment