மாணிக்க விநாயகம்: காற்றில் கலந்த கணீர் குரல்!

பக்திப் பாடல்கள், நாட்டுப்புறப் பாடல்கள், திரைப்பாடல்கள் என 15,000-க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ள பிரபல பின்னணிப் பாடகர் மாணிக்க விநாயகம் உடல்நலக் குறைவால் சென்னையில் காலமானார். அவரது மறைவுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உட்பட பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

அவரைப் பற்றிய சிறு நினைவுகூரல்!

நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறையைச் சேர்ந்த மாணிக்க விநாயகம், பிரபலமான கலை குடும்பத்தைச் சேர்ந்தவர். பிரபல நடன ஆசிரியர் வழுவூர் ராமையாவின் இளைய மகன். கணீர்க் குரலால் பாடல்களைப் பாடிய இவர், நடிப்பால் ரசிகர்களையும் கவர்ந்தவர் மாணிக்க விநாயகம்.

2001-ம் ஆண்டு வெளியான ’தில்’ திரைப்படத்தில் ‘கண்ணுக்குள்ள ஒருத்தி’ என்ற பாடல் மூலம் தனது திரைப்பயணத்தை தொடங்கிய இவர் பல்வேறு மொழிகளில் 800-க்கும் மேற்பட்ட திரைப்பட பாடல்களைப் பாடியுள்ளார்.

விக்ரம், தனுஷ், சூர்யா, விஜய், ஜெயம் ரவி உள்ளிட்ட டாப் நடிகர்களின் படங்களில் பல சூப்பர் ஹிட் பாடல்களைப் பாடியவர்.

திரைப்பாடல்களைத் தவிர பக்திப் பாடல்கள், நாட்டுபுறப் பாடல்கள் என ஆயிரக்கணக்கான பாடல்களைப் பாடியுள்ள இவர், திருடா திருடி, கம்பீரம், பேரழகன் உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார்.

மாணிக்க விநாயகத்தின் சில ஹிட் பாடல்கள்:

கண்ணுக்குள்ள கெளுத்தி – தில்
ஏல இமயமலை – தவசி
விடை கொடு – கன்னத்தில் முத்தமிட்டால்
அர்ஜுனரு வில்லு – கில்லி
வண்டி வண்டி – ஜெயம்
அருவா மீசை – தூள்
சின்ன வீடா வரட்டுமா – ஒற்றன்
காதல் வந்தால் சொல்லி அனுப்பு – இயற்கை
புண்ணாக்குன்னு சொன்னா – அருள்
கொக்கு பற பற – சந்திரமுகி
கட்டு கட்டு கீர கட்டு – திருப்பாச்சி
அய்யய்யோ – பருத்தி வீரன்
நானே இந்திரன் – சிங்கம்
தேரடி வீதியில் – ரன்
மன்னார்குடி கலகலக்க – சிவப்பதிகாரம்
சுப்பம்மா சுப்பம்மா – ரோஜா கூட்டம்.

Comments (0)
Add Comment