நினைவில் நிற்கும் வரிகள்:
***
இதோ எந்தன் தெய்வம் முன்னாலே
நான் ஒரே ஒரு புன்னகையில் கண்டேனே
பாசமுள்ள பார்வையிலே
கடவுள் வாழ்கிறான்
அவன் கருணையுள்ள நெஞ்சினிலே
கோயில் கொள்கிறான்.
(இதோ எந்தன்…)
அவன் பூ விரியும் சோலையிலே
மணப்பான்
இசைப் பூங்குயிலின் தேன் குரலில்
இருப்பான்
குளிர் மேகமென தாகத்தையே
தணிப்பான்
தளிர்க்கொடி விளையும் கனிகளிலே
இனிப்பான்
(இதோ எந்தன்…)
பல நூல் படித்து
நீ அறியும் கல்வி
பொது நலம் நினைத்து
நீ வழங்கும் செல்வம்
பிறர் உயர்வினிலே
உனக்கு இருக்கும் இன்பம்
இவை அனைத்திலுமே
இருப்பதுதான் தெய்வம்.
(இதோ எந்தன்…)
தன் வியர்வையிலும் உழைப்பினிலும்
வாழ்வை கண்டு தொழில் புரிந்து
உயிர் வளர்க்கும் ஏழை
அவன் இதழ் மலரும்
சிரிப்பொலியாய் கேட்டேன்
அந்த சிரிப்பினிலே
இறைவனை நான் பார்த்தேன்.
(இதோ எந்தன்…)
– 1971-ம் ஆண்டு சிவாஜி கணேசன் நடிப்பில் வெளிவந்த ‘பாபு‘ திரைப்படத்தில் இடம்பெற்ற இப்பாடல் வரிகளை எழுதியவர் கவிஞர் வாலி.
இசை – எம்.எஸ்.விஸ்வநாதன். குரல் – டி.எம்.சௌந்தரராஜன்.