நிலையான செல்வம் எது?

நினைவில் நிற்கும் வரிகள்:

***

கல்வியா செல்வமா வீரமா
அன்னையா தந்தையா
தெய்வமா
ஒன்றில்லாமல்
மற்றொன்று உருவாகுமா
இதில் உயர்வென்றும்
தாழ்வென்றும் பிரிவாகுமா

(கல்வியா…)

கற்றோர்க்கு பொருள் இன்றி
பசி
தீருமா
பொருள் பெற்றோர்க்கு
அறிவின்றி புகழ் சேருமா

கற்றாலும்
பெற்றாலும் பலம்
ஆகுமா வீரம் காணாத
வாள் என்றும் வாழ்வாகுமா

(கல்வியா…)

படித்தவன் கருத்தெல்லாம்
சபை
ஏறுமா
பணம் படைத்தவன்

கருத்தானால் சபை மீறுமா
படித்தவன்
படைத்தவன் யாராயினும்
பலம் படைத்திருந்தால்
அவனுக்கிணையாகுமா

(கல்வியா…)

ஒன்றுக்குள்
ஒன்றாக கருவானது
அது ஒன்றினில் ஒன்றாக
பொருளானது 

ஒன்றை ஒன்று
பகைத்தால் உயர்வேது
மூன்றும் ஓரிடத்தில்
இருந்தால் நிகரயேது 

(கல்வியா…)

மூன்று தலை முறைக்கும்
நிதி வேண்டுமா

காலம் முற்றும் புகழ் வளர்க்கும்
மதி வேண்டுமா 

தூங்கும் பகை
நடுங்கும் பலம் வேண்டுமா
இவை மூன்றும்
துணை நிற்கும் நலம் வேண்டுமா

(கல்வியா…)

– 1966-ம் ஆண்டு சிவாஜி கணேசன் நடிப்பில் வெளிவந்த ‘சரஸ்வதி சபதம்‘ திரைப்படத்தில் இடம்பெற்ற இப்பாடல் வரிகளை எழுதியவர் கவியரசர் கண்ணதாசன். கே.வி.மகாதேவன் இசையில் பாடலைப் பாடியவர் டி.எம்.சௌந்திரராஜன்.

Comments (0)
Add Comment