பாரதியின் உறவினரைக் கௌரவித்த எம்.ஜி.ஆர்!

*

1983 ஆம் ஆண்டு.

மகாகவி பாரதியின் மனைவி செல்லம்மாளின் ஊரான கடையத்தில் அப்போது வசித்து வந்திருக்கிறார் பாரதியின் மைத்துனியான சௌமினி அம்மாள்.

அப்போது அவருக்கு வயது 73.

திருமணம் செய்து கொள்ளாத வாழ்க்கை. முதியோர் பென்ஷன், வாடகைப் பணமுமாக ரூ 60 ல் வாழ்க்கை நடத்துவதாகப் பேட்டி ஒன்றில் சொல்லியிருந்தார் சௌமினி அம்மாள்.

அந்தப் பேட்டியை முதல்வரான எம்.ஜி.ஆர் படித்திருக்கிறார்.

உடனே சௌமினி அம்மாளிடம் அரசிடம் உதவி கோரச் சொல்லித் தகவல் சொல்லப்பட்டது.

அவரும் அதன்படியே விண்ணப்பித்தார்.

மாதம் தோறும் 200 ரூ உதவித் தொகை வழங்குமாறு கேட்டிருந்தார் அவர்.

அவருடைய விண்ணப்பம் முதல்வரான எம்.ஜி.ஆரின் பார்வைக்கு வந்தது.

உதவித் தொகை 200 என்றிருந்ததை அடித்து மாதம் தோறும் 500 ரூ என்று மாற்றினார் எம்.ஜி.ஆர்.

“உடனே தாமதமில்லாமல் உதவித் தொகை கிடைக்க வழி செய்ய வேண்டும்” என்கிற குறிப்பையும் அவர் எழுதினார்.

அதன்படியே பாரதி விழா ஒன்றில் முதல் உதவித்தொகையை நேரடியாக  சௌமினி அம்மாளுக்கு வழங்கியவர் அப்போதைய அமைச்சரான ஆர்.எம்.வீரப்பன்.

Comments (0)
Add Comment