அதிமுக தொண்டர் ஆற்காடு திரு. எம்.நடராஜன் மறைவுக்கு திருமதி வி.கே.சசிகலா அவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,
“ஆற்காடு தொகுதியில் 1981 முதல் 1985 வரை அதிமுக எம்.எல்.ஏ.வாக இருந்த திரு. ஏ.எம்.சேதுராமன் அவர்களின் சகோதரரும், கழக செயல் வீரரும், தென்சென்னை முன்னாள் மாவட்டத் துணைச் செயலாளருமான திரு என்.வைத்தியலிங்கம் மற்றும் கழக தென்சென்னை வடக்கு மாவட்டப் பொருளாளர் திரு. என். மகேஷ் அவர்களின் தந்தையுமான திரு ஆற்காடு எம்.நடராஜன் இன்று காலமானார். அவருக்கு வயது 87.
அவர், சென்னை துறைமுகத்தில் (Chennai Port Trust) மூத்த கணக்கு அதிகாரியாக இருந்து ஓய்வுபெற்றவர்.
அவர் இன்று அதிகாலை தனியார் மருத்துவமனையில் இயற்கை எய்தினார் என்ற செய்தியைக் கேட்டு மிகவும் துயருற்றேன்.
தந்தையை இழந்து வாடும் திரு என்.வைத்தியலிங்கம் அவர்களுக்கும், அவரது நான்கு சகோதரர்கள் உள்ளிட்ட அவரது குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மறைந்த ஆற்காடு திரு எம்.நடராஜன் அவர்களின் ஆன்மா இறைவன் திருவடிகளில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.” எனத் தெரிவித்துள்ளார்.
18.12.2021 6 : 30 P.M