காவல்துறையினருக்கு தைரியமும், நம்பிக்கையும் வேண்டும்!

 – தமிழகக் காவல்துறை தலைவர் சைலேந்திரபாபு

தென்மாவட்ட காவல்துறையினருக்கான குறைதீர்க்கும் முகாம் மதுரையில் நடைபெற்றது. இந்த முகாமின்போது சுமார் 900 காவல்துறையினரிடம் தமிழகக் காவல்துறை தலைவர் சைலேந்திரபாபு மனுக்களை பெற்றுக் கொண்டார்.

அதன் பின் பேசிய சைலேந்திபாபு, “காவலர் பணி கடினமானதுதான். 24 மணி நேரமும் பணி செய்யக்கூடிய ‘ரிஸ்க்’கான வேலை.

வீரப்பனை பிடிக்கும்போது நாம் 10 பேர்தான் இருந்தோம். அவர்கள் 200 பேர் வரை இருந்தார்கள். தைரியத்துடனும், நம்பிக்கையுடனும் பணி செய்ய வேண்டும். நாம் செய்யும் ஒவ்வொரு பணியும் காவல் துறையினர் குடும்பத்திற்கு பெருமை சேர்க்கும் வகையில் இருக்க வேண்டும்.

இடமாறுதல் தொடர்பாக கொடுக்கப்பட்ட அனைத்து மனுக்களுக்கும் தீர்வு காண முடியாது. ஏனெனில் வரும் ஜூனில் பலர் ஓய்வு பெறுகிறார்கள். அதைப் பொறுத்து இடமாறுதல் வழங்கப்படும்.

குடும்ப சூழலால் கட்டாயம் இடமாறுதல் அளித்துதான் ஆக வேண்டும் என்றால் அதுகுறித்து பரிசீலிக்கப்படும்.

இடமாறுதலாகி செல்லும்போது காவல்துறையினரின் குடும்பத்தின் நிலை வளர்ச்சி அடையும். ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டவர்களில் 51 காவல்துறையினரின் தண்டனை ரத்து செய்யப்பட்டு மீண்டும் பணியில் சேர்த்துக் கொள்ளப்பட்டனர்.

எஸ்.எஸ். பதவி உயர்வுக்கான சம்பள உயர்வு உள்ளிட்டவை குறித்து குழு நியமித்து பரிசீலிக்கப்படும்” எனக் கூறினார்.

17.12.2021  12 : 30 P.M

Comments (0)
Add Comment