தனிநபர் தகவல்களைப் பாதுகாக்க வேண்டும்!

– நாடாளுமன்ற கூட்டுக்குழு அறிக்கை தாக்கல்

தனிநபர் தகவல் பாதுகாப்பு மசோதாவை மக்களவையில் மத்திய அரசு 2019 டிசம்பரில் தாக்கல் செய்தது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் இந்த மசோதாவை பா.ஜ.க எம்.பி., சவுத்ரி தலைமையிலான நாடாளுமன்ற கூட்டுக்குழுவுக்கு மத்திய அரசு அனுப்பியது.

இந்த மசோதாவை ஆய்வு செய்த நாடாளுமன்ற கூட்டுக்குழு தனது அறிக்கையை நாடாளுமன்றத்தின் இரு சபைகளிலும் நேற்று தாக்கல் செய்தது.

இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள் பற்றி மக்களவை செயலகம் வெளியிட்ட அறிக்கையில்,

“தனிநபர் தகவல்கள் மட்டுமின்றி பொது தகவல்களையும் பாதுகாக்க வேண்டியது அவசியம். சமூக வலைதளங்களுடன் இணைந்துள்ள ஊடகங்களை வெளியீட்டாளர்களாகத் தான் கருத வேண்டும்.

அதனால் சமூக வலைதளங்களில் இணைந்துள்ள ஊடகங்களுக்கு அதிக பொறுப்புணர்வு தேவை. சமூக வலைதளங்களுடன் இணைந்துள்ள ஊடகங்களை முறைப்படுத்த தனி அமைப்பு ஏற்படுத்த வேண்டும்” எனக் கூறப்பட்டுள்ளது.

Comments (0)
Add Comment