– தந்தை பெரியார்
”தமிழில் வழிபாடு செய்ய வேண்டும்” என்று தவத்திரு குன்றக்குடி அடிகளார் அவர்கள் 1955 ஆம் ஆண்டு போராட்டத்தைத் தொடங்கியபோது, அதனைப் பெரியார் ஆதரித்தார். அதற்கு முந்தைய ஆண்டு தான் பெரியாரும், அடிகளாரும் நேரடியாகச் சந்தித்துப் பேசினார்கள்.
ஆன்மீகத்துக்குள் தமிழுக்கும், தமிழர்களுக்குமான உரிமையை நிலைநாட்டுவது என்று அடிகளாரும், கடவுளை மிகக் கடுமையாக அல்லாமல், மென்மையாக விமர்சிப்பது என்று பெரியாரும் மனதளவில் முடிவெடுத்துச் செயல்பட்டார்கள்.
எனவே கோவில்களில் தமிழில் வழிபாடு என அடிகளார் சொன்னதைப் பெரியார் வரவேற்றார்.
ஆதரித்துத் தலையங்கம் தீட்டினார்.
“தமிழ்நாட்டுக் கடவுளுக்குத் தமிழ் புரியாதா?” என்று தலையங்கம் தீட்டினார்.”
– விடுதலை- 23.5.1955
“இவர் தமிழர் இல்லை என்றால் எவர் தமிழர்?” – ப.திருமாவேலன் எழுதியுள்ள நூலில் இருந்து ஒரு பகுதி
நூல் வெளியீடு: நற்றிணை பதிப்பகம், சென்னை-5.
இரு தொகுதிகள், விலை ரூ 1800 ;
தொலைபேசி : 044- 2848 1725