ஜெயலலிதா அப்போது திரைத்துறையில் உச்சத்தில் இருந்த நேரம்.
பத்திரிகை ஒன்றிற்காக அவரிடம் “நீங்கள் புடவை விற்பதைப் போல ஒரு கட்டுரை தயாரிக்க வேண்டும்” என்று அனுமதி கேட்டபோது, அதற்குச் சம்மதித்தார்.
விதவிதமான புடவைகளை எடுத்துக் கொண்டு, அவற்றை விற்க அவர் சென்ற இடம்.
அவருடைய தோழியான எழுத்தாளர் சிவசங்கரியின் வீட்டிற்கு.
அந்தச் சந்திப்பு நான்கு பக்கங்களைக் கொண்ட கட்டுரையாக 30.4.1970 தேதியிட்ட குமுதம் வார இதழில் வெளிவந்திருக்கிறது.
தலைப்பு ‘ஜெயலலிதாவுக்குப் புடவை விற்கத் தெரியுமா?’