-ஶ்ரீ அரவிந்தரின் பொன்மொழிகள்
- முதலில் நீ யார் என்பதை உன்னுள் உணர்ந்து கொள். பின்னர் செயலாற்று. காலமும், உயிரும், உலகும் நல்ல செயல் புரிவதற்குரிய களங்களாக நமக்களிக்கப்பட்டுள்ளன.
- இறையின்பம் காலவரையறைக்கு உட்பட்டதன்று. அது ஆதி அந்தமற்றது. செய்யும் செயல்களை எல்லாம் கடவுளுக்கு செய்யும் செயல்களாகக் கருதி செயல்படுபவர்களின் மனம் கோயில். அங்கு எப்போதும் அமைதியும் மகிழ்ச்சியும் நிலைத்திருக்கும்.
- ஆற்றலைப் பெற வேண்டுமானால், மனதில் எப்போதும் ஆற்றலைப் பற்றிய எண்ணமே இருக்க வேண்டும். எண்ணத்தாலும், சொல்லாலும், செயலாலும் ஆற்றல் பற்றியே சிந்தித்துக் கொண்டிருக்க வேண்டும்.
- ஆன்மிகப் பொருளுடைய கனவு ஒன்றைக் கண்டால் அது அனுபவம். அதன் பொருளை உணர்ந்தால் ஞானம்.
- ஆண்டவனின் அருளாட்சியில் தீமை என்பது இல்லை. வெறுப்பு இருபுறமும் வெட்டுகின்ற வாளினைப் போன்றது. உன் எதிரியை தாக்கத் தவறினால் சீற்றத்துடன் திரும்பி வந்து தன்னை அனுப்பியவனையே அழிக்கும் தன்மையுடையது.
- சூனியக்காரர்களின் மந்திர சக்தியைப் போன்றது. அதனால், வெறுப்பினை மறந்து விருப்பமாகிய அன்பினை வளர்த்துக் கொள்ளுங்கள். பகைவனை தாக்கும் போது அவனுள்ளிருக்கும் இறைவன் மீது அன்பு செலுத்துங்கள்.
- பிறரை வெறுக்கும் குணமுடையவர்கள், முதலில் தங்களிடமுள்ள தீய குணங்களை ஒழித்துக்கட்ட முயற்சி செய்ய வேண்டும்.
- பெருந்தன்மையையும், தாராளமனப் பான்மையையும் வளர்த்துக் கொண்டால் மனிதன் விண்ணுலகத்தையே மண்ணுலகிற்கு கொண்டுவர இயலும்.
- வாழ்வில் வெற்றி தோல்வி என்ற பேச்சுக்கே இடமில்லை. நான் தோல்வியடைந்தேன் என்று யாரும் குறைபட்டுக்கொள்ளத் தேவையில்லை. வெற்றிக்கான பாதையில் தான் நாம் அனைவரும் சென்று கொண்டிருக்கிறோம்.
- வெற்றி சிலருக்கு கொஞ்சம் தாமதமாக கிடைக்கிறது, சிலர் வெற்றியை நோக்கி சுற்றிவளைத்து செல்வதால் தாமதமாகிறது.
09.12.2021 10 : 50 A.M