பிபின் ராவத் உட்பட 13 பேரின் உடலுக்கு அஞ்சலி!

நீலகிரி மாவட்டம் வெலிங்டன்னில் நடைபெற இருந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக இந்திய முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மற்றும் ராணுவ வீரர்கள் 12 பேர் கோவை சூலூர் விமானப்படைத் தளத்திலிருந்து எம்.ஐ 17 வி 5 ரக ராணுவ ஹெலிகாப்டரில் புறப்பட்டனர்.

அவர்கள் சென்ற ஹெலிகாப்டர் குன்னூர் காட்டேரி பகுதியில் நேற்று 12.40 மணியளவில் மோசமான வானிலை காரணமாக விபத்துக்குள்ளானது.

விபத்தில் இந்திய முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் மற்றும் அவருடன் பயணித்த அவரது மனைவி மற்றும் ராணுவ வீரர்கள் 11 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

விபத்து நடந்த இடத்தில் ராணுவ வீரர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். ஒரு ராணுவ வீரர் மட்டும் பலத்த தீக்காயங்களுடன் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விபத்தில் உயிரிழந்த பிபின் ராவத் அவரது மனைவி மற்றும் ராணுவ வீரர்கள் 11 பேரின் உடல்கள் வெலிங்டன் ராணுவ மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளன.

இன்று காலை 8 மணி முதல் பிபின் ராவத், மனைவி மற்றும் ராணுவ வீரர்களின் உடலுக்கு வெலிங்டன்னில் அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது.

பிபின் ராவத் உடலுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் மற்றும் பலர் கலந்து கொள்கின்றனர்.

பிபின் ராவத் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சிக்கு பிறகு அவரது உடல் மற்றும் அவரது மனைவியின் உடல் டெல்லிக்கு விமானம் மூலம் எடுத்துச் செல்லப்பட உள்ளன.

பொதுமக்கள் அஞ்சலிக்குப் பிறகு நாளை பிபின் ராவத்தின் உடல் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.

விபத்தில் இறந்த மற்ற ராணுவ வீரர்களின் உடல்களும் அவரவர் சொந்த ஊர்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டு அஞ்சலி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

09.12.2021    11 : 10 A.M

Comments (0)
Add Comment