கவலைகள் கிடக்கட்டும் மறந்துவிடு!

நினைவில் நிற்கும் வரிகள்:

***

கவலைகள் கிடக்கட்டும்
மறந்துவிடு
காரியம் நடக்கட்டும்
துணிந்துவிடு
எடுத்தவர் யாரோ மறைத்தவர் யாரோ
இருக்குது நீதி சிரித்துவிடு

(கவலைகள்…) 

நீதியும் நெருப்பும் ஒன்றென்பார்
நெருங்கிடும் போதே சுடும் என்பார்
யாரையும் எதுவும் சுடவில்லை
என்னையும் பழியோ விடவில்லை

சுட்டதும் தங்கத்தின் நிறம் போமோ
தொட்டதும் மலர்களின் மணம் போமோ
கற்றவன் கலங்குதல் அழகாமோ
சட்டமும் கற்பனைக் கதையாமோ

(கவலைகள்…) 

நாவுக்கும் மனதுக்கும் உள்ள வழி
நான்கு விரல்கடை தூர வழி
சொல்லுக்கும் செயலுக்கும் காத வழி
சுற்றமும் சுகமும் வேறு வழி

வந்ததில் எல்லாம் பொருளுண்டு
வருவதில் வெற்றியும் நமக்குண்டு
நிச்சயம் இரவுக்கு பகலுண்டு
நீதியின் கண்களில் ஒளியுண்டு

(கவலைகள்…) 

அண்ணனில் ஆயிரம் பேருண்டு
ஆயினும் உன் போல் யாருண்டு
பழிகளில் ஆயிரம் வகையுண்டு
பார்ப்போம் இதற்க்கோர் முடிவுண்டு

வந்ததில் எல்லாம் பொருளுண்டு
வருவதில் வெற்றியும் நமக்குண்டு
நிச்சயம் இரவுக்கு பகலுண்டு
நீதியின் கண்களில் ஒளியுண்டு

(கவலைகள்…) 

– 1962-ம் ஆண்டு சிவாஜி கணேசன் நடிப்பில் வெளிவந்த ‘பந்த பாசம்‘ திரைப்படத்தில் இடம்பெற்ற இப்பாடல் வரிகளை எழுதியவர் கவிஞர் மாயவநாதன்.

Comments (0)
Add Comment