முப்படைகளின் தளபதி பிபின் ராவத்தின் நீண்ட… பயணம்!

நீலகிரி மாவட்டம் குன்னூர் வெலிங்டன் பயிற்சிக் கல்லூரியில் இருந்து 10 கி.மீ. தொலைவில் உள்ள காட்டுப்பகுதியில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது.

விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரில் இந்திய முப்படைகளின் தளபதி பிபின் ராவத், அவரது மனைவி உளப்பட 14 பேர் பயணம் செய்தனர்.

இந்த விபத்தில் முப்படைகளின் தளபதி பிபின் ராவத் உள்பட 13 பேர் உயிரிழந்தனர்.
விபத்தில் காயமடைந்த விமானப்படை கேப்டன் வருண் சிங், வெலிங்டன் ராணுவ மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார்.

ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த முப்படைகளின் தளபதி பிபின் ராவத் கடந்து வந்த பாதையைப் பற்றித் தெரிந்து கொள்வோம்.

***

ஜெனரல் பிபின் ராவத், சிம்லாவில் உள்ள செயிண்ட் எட்வார்ட் பள்ளியில் படித்தார். பின்னர் கடக்வாஸ்லாவில் உள்ள தேசிய பாதுகாப்பு அகாடமியில் படித்தார்.

வெலிங்டனில் ராணுவ சேவை கல்லூரியில் பயின்று பட்டம் பெற்ற பின் அமெரிக்காவுக்கு சென்று மேல் படிப்பை முடித்தார்.

1978-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் டேராடூனில் உள்ள இந்திய ராணுவ பயிற்சி நிலையத்தில் உள்ள பதினோராவது கூர்கா ரைஃபிள்ஸ் பிரிவின் ஐந்தாவது படையணியில் சேர்ந்தார்.

வடகிழக்கு மாநில எல்லைப் பகுதிகள், காஷ்மீர் பள்ளத்தாக்குகள், இந்தியா – பாகிஸ்தான் மற்றும் இந்திய – சீன எல்லைப் பகுதி என பல்வேறு களங்களில் பணியாற்றி, தேர்ந்த அனுபவத்தை பெற்றார்.

காங்கோ நாட்டிற்கு சென்று சர்வதேச ராணுவத்தில் சில காலம் பணியாற்றிய பிபின் ராவத், அங்கு படைகளுக்கு தலைமை தாங்கினார்.

படிப்படியாக இந்திய ராணவத்தின் பல்வேறு பதவிகளை அலங்கரித்த பிபின் ராவத், கடந்த 2016 டிசம்பர் 31-ஆம் தேதி ராணுவத் தளபதி பொறுப்புக்கு வந்தார்.

தற்போது முப்படைகளின் முதல் தலைமை தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 30-ம் தேதி இந்திய முப்படைகளின் முதல் தலைமை தளபதியாக நியமிக்கப்பட்டார்.

Comments (0)
Add Comment