ஜெ. நினைவுநாள்: ராஷ்டிரிய லோக் ஜனசக்தி கட்சியின் ஜி.வி.மணிமாறன் மலரஞ்சலி!

மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் 5-வது நினைவு நாளன்று (05.12.2021) அவரது நினைவிடத்தில் ராஷ்டிரிய லோக் ஜனசக்தி கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் ஜி.வி.மணிமாறன், மாநிலத் தலைவர் சத்தியசீலன் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.

மாநிலத் துணைத் தலைவர் ஸ்ரீ விஜய், சட்டப் பிரிவு மாநிலத் தலைவர் ஸ்ரீ கமலக்கண்ணன், சென்னை, மத்திய  ராஷ்டிரிய லோக் ஜனசக்தி கட்சியின் (RLJP) தலைவர், திரு.கௌதம், திரு. அரவிந்த் விமல் விளையாட்டுப் பிரிவு மாநிலத் தலைவர் மற்றும் ஏராளமான கட்சித் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

அதைத் தொடர்ந்து, ராஷ்டிரிய லோக் ஜனசக்தி கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் ஜி.வி.மணிமாறன், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு நினைவஞ்சலி செலுத்தும் வகையில், வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“ஆறு முறை தமிழக முதல்வராக இருந்த சரித்திர சாதனையாளர் புரட்சித் தலைவி செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்களின் 5 ஆம் ஆண்டு நினைவு நாளில் அவருக்கு ராஷ்டிரிய லோக் ஜனசக்தி கட்சியின் சார்பில் நினைவஞ்சலி செலுத்துகிறோம்.

தென்னக திரை உலகிலும், தமிழக அரசியல் அரங்கிலும் சரித்திர சாதனைகள் படைத்தவர் புரட்சித் தலைவி செல்வி ஜெ.ஜெயலலிதா.

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் 140க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர் செல்வி ஜெ.ஜெயலலிதா. 1961ல் குழந்தை நட்சத்திரமாக கன்னட திரைப்படமான ‘ஸ்ரீ சைலா மகாத்மே’லிருந்து, தனது திரை வாழ்க்கையை துவங்கினார்.

1965ல் இயக்குனர் ஸ்ரீதரின் ‘வெண்ணிற ஆடை’ எனும் திரைப்படம் மூலம் தமிழில் அறிமுகமானார். பின்னர் எம்.ஜி.ஆர். உடன் 28 திரைப்படங்களும், சிவாஜி கணேசனுடன் 17 திரைப்படங்களும் நடித்து, தனது நடிப்பிற்காக பல்வேறு உயரிய விருதுகளைப் பெற்றார்.

புரட்சித் தலைவர் எம்ஜிஆர் துவங்கிய அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தில் இணைந்து, தனது அரசியல் வாழ்வை துவங்கிய செல்வி ஜெ.ஜெயலலிதா, 1984 முதல் 1989 வரை மாநிலங்களவை உறுப்பினராக பணியாற்றினார்.

மாநிலங்களவையில் பல்வேறு பிரச்சனைகள் குறித்து செல்வி ஜெ.ஜெயலலிதாவின் பேச்சை அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி வெகுவாக பாராட்டியுள்ளார்.

1987ல் எம்ஜிஆர் மறைவுக்கு பின்னர், 1989ல் அஇஅதிமுகவின் தலைமை பொறுப்பை ஏற்று, 1991ல் தமிழகத்தில் ஆட்சியை பிடித்து, பதவிகாலம் முழுவதும் ஆட்சியிலிருந்த முதல் தமிழக பெண் முதல்வர் என பெயர் பெற்றார்.

ஆறு முறை தமிழகத்தின் முதல்வராக இருந்த செல்வி ஜெ.ஜெயலலிதா, தொட்டில் குழந்தைகள் திட்டம், அம்மா உணவகம், இலவச கறவை மாடு ஆடுகள் வழங்கும் திட்டம் போன்ற எண்ணற்ற மக்கள் நலத் திட்டங்களை தமிழகத்துக்கு வழங்கினார்.

புரட்சித் தலைவி என்றும், அம்மா என்றும் தொண்டர்களால் அன்போடு அழைக்கப்பட்ட செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்கள், உடல் நலக் குறைவால் 75 நாட்கள் மருத்துவமனையில் இருந்து, 2016ஆம் ஆண்டு டிசம்பர் 5 ஆம் தேதி அன்று காலமானார்.

மண்டல் நாயகன், மக்கள் தலைவர், மறைந்த, திரு. ராம்விலாஸ் பஸ்வான் அவர்களால் தோற்றுவிக்கப்பட்டு, தற்போது அவரது இளைய சகோதரர் மாண்புமிகு மத்திய அமைச்சர் திரு. பசுபதி குமார் பாரஸ் அவர்கள் புரட்சித் தலைவி செல்வி தலைமையில் இயங்கி வரும் ராஷ்டிரிய லோக் ஜனசக்தி கட்சியின் சார்பில், அவர்களால் தோற்றுவிக்கப்பட்டு, புரட்சித் தலைவி செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்களின் 5 ஆம் ஆண்டு நினைவு நாளில் அவருக்கு நினைவஞ்சலி செலுத்துகிறோம்.

ஜெ.ஜெயலலிதா அவர்கள் தலைமையேற்று வழிநடத்திய இயக்கமான அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகமும், ராஷ்டிரிய லோக் ஜனசக்தி கட்சியும், மத்தியில் பிரதமர் மோடியின் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் முக்கிய அங்கம் வகிக்கும் கட்சிகள் ஆகும்.

புரட்சித் தலைவி செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்கள் தனது அரசியல் பயணத்தில் பல்வேறு தோல்விகள், துன்பங்கள், அவமானங்களை எதிர்கொண்டு, சோதனைகளை சாதனைகளாக மாற்றிக்காட்டிய இரும்புப் பெண்மணி ஆவார்.

அவரது வழியில், தற்போது இருபெரும் தலைவர்கள் தலைமையில் திராவிட முன்னேற்ற கழகமும், தற்காலிக இயங்கும் அனைத்து இந்திய அண்ணா பின்னடைவுகளை சரிசெய்து மகத்தான வெற்றிகள் படைக்க ராஷ்டிரிய லோக் ஜனசக்தி கட்சி சார்பில் மனதார வாழ்த்துகிறோம்.” என்று ஜிவி மணிமாறன் தெரிவித்துள்ளார்.

Comments (0)
Add Comment