ராமர் கோவிலுக்கு அடுத்து கிருஷ்ணர் பிறந்த இடம்!

பா.ஜ.க அடுத்த திட்டம்

அயோத்தியில் ராமர் கோவில் பிரச்சினை நீண்ட காலம் சலசலப்பை ஏற்படுத்தி அந்த இடத்தில் ராமர் கோவில் எழுப்பப்பட்டு வருவது தெரிந்த விஷயம் தான்.

ராமஜென்ம பூமி என்பதை முழக்கமாகவே இந்து அமைப்புகளும், பா.ஜ.க.வும் சொந்தம் கொண்டாடின.

தற்போது பா.ஜ.க.வின் அடுத்த குறி மதுராவில் உள்ள கிருஷ்ணர் பிறந்ததாகச் சொல்லப்படும் கிருஷ்ணர் கோவில் மீது பட்டிருக்கிறது.

அடுத்துச் சில மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல்கள் நடக்க இருப்பதை அடுத்தே வேளாண் சட்டங்களை ஒன்றிய அரசு வாபஸ் பெற்றதாகச் சொல்லப்பட்டது.

தற்போது அதே தேர்தலுக்கான இன்னொரு முழக்கமாக வைப்பதற்கான இலக்காக மதுரா கோவில் ஆகிவிட்டிருக்கிறது.

மதுரா கோவில் பற்றிப் பதிவிட்டிருப்பவர் உத்தரப் பிரதேச மாநிலத்தின் துணை முதல்வரான கேசவ் பிரசாத் மௌரியா.

“அயோத்தியில் பிரமாண்டமான கோவில் கட்டப்படும் நிலையில், அடுத்த நடவடிக்கை மதுரா தான்.

ராமர் புகழ் வாழ்க! ஜெய் ஸ்ரீ ராதே கிருஷ்ணா”

மதுரா குறித்து பா.ஜ.க.வின் முக்கியப்பிரமுகர் பதிவிட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

ராமாயணம் முடிந்து சிலருக்கு ‘மகாபாரதம்’ நினைவுக்கு வர ஆரம்பித்துவிட்டது.

03.12.2021 12 : 30 P.M

Comments (0)
Add Comment