நினைவில் நிற்கும் புனைவு!

அருமை நிழல்:

*

1965-ம் ஆண்டு ஜூலை 9-அன்று வெளியான ‘ஆயிரத்தில் ஒருவன்’ படத்திற்கு அமோக வரவேற்பு. அருமையான பாடல்கள், கூரான வசனங்கள், வித்தியாசமான லொகேஷன், இயல்பான நடிப்பு என்று அழகிய கனவைப் போலிருந்தது அந்த வண்ணமயமான படம்.

படத்தைத் தயாரித்து இயக்கியவர் அதுவரை சிவாஜியின் பல படங்களைத் தயாரித்தவரான பி.ஆர்.பந்துலு. ‘பருவம் எனது பாடல்’ என்கிற பாடலுடன் இளவரசியாக அறிமுகமான ஜெயலலிதாவைப் புகழின் உச்சிக்கே கொண்டு சென்றது இந்தப்படம்.

இந்தப் படத்திற்கு வித்தியாசமான பெயரை எம்.ஜி.ஆர் தேடிக் கொண்டிருந்த போது, இந்தப் பெயரைச் சூட்டி, எம்.ஜி.ஆரிடம் இருந்து படத்தலைப்புக்கேற்ற படி ஆயிரம் ரூபாயைப் பெற்றவர் இந்தப் படத்தின் வசனகர்த்தாவான ஆர்.கே.சண்முகம்.

இப்போதும் திரையரங்க மறு ரிலீஸில் கூட்டம் அலை மோத வைக்கிறது ‘ஆயிரத்தில் ஒருவன்’.

Comments (0)
Add Comment