நினைவில் நிற்கும் வரிகள்:
பாடலாசிரியர் மருதகாசியின் நினைவுநாள் (13, பிப்ரவரி 1920 – 29 நவம்பர் 1989)
எளிமையான வரிகளின் மூலம் திரையிசையில் தடம் பதித்த திரைப்படம் பாடலாசிரியர் மருதகாசி 4000 பாடல்கள் வரை எழுதியிருக்கிறார்.
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்., சிவாஜி கணேசன் நடித்த பல படங்களுக்கு பாடல் எழுதியுள்ள மருதகாசியின் பாடல் ஒன்று.
கடவுள் என்னும் முதலாளி
கண்டெடுத்த தொழிலாளி
விவசாயி …. விவசாயி ….
(கடவுள்…)
முன்னேற்ற பாதையிலே மனச வைத்து
முழு மூச்சா அதற்காக தினம் உழைத்து
மண்ணிலே முத்தெடுத்து பிறர் வாழ
வழங்கும் குணம் உடையோன் விவசாயி
விவசாயி… விவசாயி…
என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில்
ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில்
ஒழுங்காய் பாடு படு வயல் காட்டில்
உயரும் உன் மதிப்பு அயல் நாட்டில்
விவசாயி… விவசாயி…
(கடவுள்…)
கருப்பென்றும் சிவப்பென்றும் வேற்றுமையாய்
கருதாமல் எல்லோரும் ஒற்றுமையாய்
பொறுப்புள்ள பெரியோர்கள் சொன்னபடி
உழைத்தால் பெறுகாதோ சாகுபடி
விவசாயி…. விவசாயி….
இருந்திடலாம் நாட்டில் பல வண்ணக்கொடி
எத்தனையோ கட்சிகளின் எண்ணப்படி
பறக்க வேண்டும் எங்கும் ஒரே சின்னக் கொடி
அது பஞ்சம் இல்லை என்னும் அன்னக்கொடி
பஞ்சம் இல்லை என்னும் அன்னக்கொடி
விவசாயி…. விவசாயி….
(கடவுள்…)
– 1967-ம் ஆண்டு எம்.ஜி.ஆர். நடிப்பில் வெளிவந்த ‘விவசாயி’ திரைப்படத்தில் இடம்பெற்ற இப்பாடல் வரிகளை எழுதியவர் கவிஞர் மருதகாசி.