குடிமகன்கள் மீது எவ்வளவு கரிசனம்?

சென்னை அடையாறில் நடந்த மெகா தடுப்பூசி முகாம் மற்றும் டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் கலந்து கொண்டார்.

நிகழ்ச்சின்போது பேசிய அவர், “தமிழகத்தில் 78 லட்சம் பேர் இரண்டாம் தவணை தடுப்பூசி போட வேண்டிய நிலையில், 12-வது மெகா தடுப்பூசி முகாம் நடக்கிறது. இதுவரை 77.33 சதவீதம் பேர் முதல் தவணை; 42 சதவீதம் பேர் இரண்டாம் தவணை தடுப்பூசியை போட்டுள்ளனர்.

பொதுவெளியில் கலந்து கொள்வோர் கட்டாயம் தடுப்பூசி போட்டிருக்க வேண்டும் என்ற அறிவிப்பு உள்ளது. இது, மதுபான கூடங்களுக்கும், டாஸ்மாக் கடைகளுக்கும் பொருந்தும்.

எனவே, டாஸ்மாக் கடைகளுக்கு மதுபானங்கள் வாங்க வருவோர் கட்டாயம் தடுப்பூசிப் போட்டிருக்க வேண்டும். அவர்களுக்கு மட்டுமே மது வகைகள் விற்கப்படும்.

இந்நிலையில் டாஸ்மாக் கடைகளுக்கு வருபவர்கள் தடுப்பூசி செலுத்தி உள்ளார்களா என்பதை கடுமையாக கண்காணிக்க அந்தந்த மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கடந்த வாரம் முதல் இது அமலுக்கு வந்துள்ள நிலையில்,  கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் இதனை சிறப்பாக செய்து கொண்டிருக்கிறார்” எனக் கூறினார்.

Comments (0)
Add Comment