எம்.ஜி.ஆருக்கு சிறுநீரகம் அளித்த லீலாவதி இயற்கை எய்தினார்.

புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள் 1984 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் உடல்நலக் குறைவு ஏற்பட்டு, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டபோது அவருக்கு சிறுநீரக பாதிப்பு இருந்தது தெரியவந்தது.

அதனால், சிறுநீரக மாற்று சிகிச்சைக்காக அமெரிக்காவுக்கு அழைத்துச் செல்லப்பட்டார் எம்.ஜி.ஆர்.

இரண்டு சிறுநீரகமும் பாதிக்கப்பட்ட நிலையில் உடனடியாக சிறுநீரகம் மாற்ற வேண்டியிருந்தது.

அவருடைய அண்ணன் பெரியவர் சக்கரபாணி அவர்களின் மகள் லீலாவதி அவருக்கு ஒரு கிட்னியை தானம் செய்ய முன்வந்தார்.

சிறுநீரக மாற்று சிகிச்சைக்குப் பிறகு எம்.ஜி.ஆர் மூன்றாண்டுகள் நலமுடன் இருந்தார்.

தனது 35-வது வயதில் சித்தப்பா எம்.ஜி.ஆருக்கு சிறுநீரகம் தானமளித்த லீலாவதி, தன் 71 – வது வயதில் உடல் நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் பலனின்றி, இன்று அதிகாலை தனது சென்னை பெருங்குடியிலுள்ள இல்லத்தில் காலமானார்.

அவரது மறைவுக்கு பொன்மனச் செம்மலின் தொண்டர்கள் சார்பில் ஆழ்ந்த இரங்கல்கள்.

Comments (0)
Add Comment