சிவாஜியின் நாடகத்திற்கு வடக்கே கிடைத்த பாராட்டு!

அருமை நிழல் : 
*
அன்றைய பம்பாயில் ஆறு நாட்கள் தொடர்ந்து நாடகம் நடத்தினார் சிவாஜி கணேசன்.
அங்குள்ள காஸ்மோபாலிட்டன் ஸ்போர்ட்ஸ் மைதானத்தில் ஆறு நாட்கள் நடந்தன சிவாஜி நடித்த வெவ்வேறு நாடகங்கள்.

அதைப் பார்க்க இந்தி திரைப்பட உலகத்தில் உள்ள முக்கியமான பிரபலங்கள் பலரும் வந்திருந்து பாராட்டியிருக்கிறார்கள்.

ஆறாம் நாள் அன்று வீரபாண்டிய கட்டபொம்மன் நாடகம். தமிழ் தெரியா விட்டாலும், சிவாஜியின் நடிப்பைக் காண இந்தி ஸ்டார்கள் நாடகத்தைப் பார்க்க வந்திருந்தார்கள்.

நாடகத்தில் சிவாஜியின் நடிப்பைப் பார்த்துப் பிரமித்துப் போன அவர்கள் நாடகம் முடிந்ததும், சிவாஜியைப் பாராட்டிவிட்டு, அவருடன் புகைப்படம் எடுத்துக் கொள்ள ஆசைப்பட்டார்கள்.

தன்னுடைய மேக்கப்பை சிவாஜி கலைத்துவிட்டு வரும் வரை காத்திருந்து அவருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டவர்களில் பிருத்வி ராஜ்கபூர், திலீப் குமார், இசையமைப்பாளர்கள் எஸ்.டி.பர்மனும், ரவி ஷங்கரும் அடக்கம்.

தன்னைப் புகழ்ந்து இந்தி மொழியில் பேசிய கலைஞர்களுக்கு இந்தி மொழியிலேயே நன்றி சொல்லியிருக்கிறார் சிவாஜி.

நன்றி : பத்திரிகையாளர் மேஜர் தாசன்

Comments (0)
Add Comment