காவலர் மரணம் : டி.ஜி.பி.யின் எச்சரிக்கை!

திருச்சியைச் சேர்ந்த காவலர் பூமிநாதன் ஆடு திருடுகிறவர்களால் கொடூரமாகக் கொல்லப்பட்ட பிறகு திருச்சிக்கு வந்தார் தமிழக காவல்துறை டி.ஜி.பி.யான சைலேந்திரபாபு.

உயிரிழந்த காவலர் பூமி நாதனின் வீட்டுக்குச் சென்று ஆறுதல் கூறிய டி.ஜி.பி “ரோந்துப் பணியின் போது போலீசார் துப்பாக்கி எடுத்துச் செல்ல அறிவுரை வழங்கப்பட்டிருக்கிறது. போலீசாரின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால், குற்றவாளிகளைச் சுட்டுத்தள்ள சட்டம் அனுமதி அளித்திருக்கிறது” என்று தெரிவித்திருக்கிறார்.

காவலர் பூமிநாதனின் உயிரிழப்பு கொடுமையானது தான். இதில் இரண்டு சிறுவர்கள் சம்பந்தப்பட்டிருப்பது தெரிந்ததும், அவர்களுடைய பெற்றோரிடம் செல்போனில் கூப்பிட்டுப் பேசிய சிறிது நேரத்திற்குள் அவர் மீது மோசமான தாக்குதல் நடத்தப்பட்டு அவர் உயிர் இழந்திருப்பது பெரும் கொடுமை.

போலீசாரின் பாதுகாப்பு முக்கியம் என்றாலும், அண்மைக்காலத்தில் ‘என்வுண்டர்கள்’ அதிகரித்திருப்பதையும் இந்தச் சமயத்தில் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது.

டி.ஜி.பி.யின் அறிவுரைப் படி, போலீசார் தங்களைப் பாதுகாத்துக் கொள்வது முக்கியம் என்றாலும், இந்தக் காரணத்தை மையமாக வைத்து தன்னிச்சையாக எந்த நபர்களின் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுவிடக்கூடாது.

என்வுண்டர்களின் எண்ணிக்கை தகுந்த காரணங்கள் இல்லாமல் மேலும் அதிகரித்துவிடக்கூடாது.

Comments (0)
Add Comment