என்னை ஏறி மிதிக்க உங்களுக்கு என்ன அதிகாரம் இருக்கிறது?

– விவேகானந்தர்

*

தமிழகத்தில் சுவாமி விவேகானந்தர் முழங்கிய உரையிலிருந்து ஒரு பகுதி :

“எனது வாலிப அன்பர்களே?

பலம் உடையவர்களாக ஆகுங்கள். அது தான் நான் உங்களுக்கு அளிக்கக்கூடிய புத்திமதி.

நீங்கள் கீதையைப் படிப்பதை விட, கால் பந்தாடுவதன் மூலம் சுவர்க்கத்திற்கு அருகில்  செல்வீர்கள்.

இவை தைரியமான வார்த்தைகள்.

உங்களுக்கு இவைகளைச் சொல்ல வேண்டியிருக்கிறது.

ஏனெனில் நான் உங்களை நேசிக்கிறேன்.

மனித சமூகம் இயல்பாகவே பல பிரிவுகளாகப் பிரிந்துள்ளது. ஆனால் ஏதாவது ஒரு பிரிவினர் அல்லது ஜாதியினருக்குத் தனி உரிமை இருந்தால், அந்தத் தனியுரிமை தொலைய வேண்டும்.

சமூகம் இயல்பாகவே பல பிரிவுகளாக இருக்கிறது. சமூகத்தில் நான் ஒரு தொழில் செய்யலாம். நீங்கள் வேறொன்று செய்யலாம்.

நீங்கள் ராஜ்யத்தை ஆளலாம், நான் செருப்புத் தைக்கலாம்.

ஆனால் அதன் காரணமாக நீங்கள் உயர்ந்தவர்கள் என்று சொல்ல முடியாது.

என்னால் ஆக முடியாமல் இருக்கலாம், ஆனால் உங்களால் செருப்புத் தைக்க முடியுமா?

நான் செருப்புத் தைக்கலாம்; நீங்கள் வேதம் படிக்கலாம். ஆனால் அதன் காரணமாக என்னை ஏறி மிதிக்க உங்களுக்கு என்ன அதிகாரம் இருக்கிறது?

ஒருவன் கொலை செய்தால் அவனைப் புகழ்வதாம், வேறு ஒருவன் ஒரு பழத்தைத் திருடினாலும் அவனைத் தூக்கிலிட வேண்டுமாம்.

ஜாதித் துவேசத்தை அடிப்படையாகக் கொண்ட இந்த அக்கிரமங்கள் ஒழிய வேண்டும்”

  • ராம கிருஷ்ண மடம் வெளியிட்டுள்ள விவேகானந்தரின் நூலில் இருந்து ஒரு பகுதி.
Comments (0)
Add Comment