போராட்டத்தில் உயிர்நீத்த விவசாயிகளுக்கு நினைவுச் சின்னம்!

 – பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி

ஒன்றிய அரசின் 3 வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் ஓராண்டாக தொடர் போராட்டம் நடத்தி வரும் நிலையில், அந்தச் சட்டங்களை ரத்து செய்ய முடிவு செய்திருப்பதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

சட்டங்கள் தொடர்பாக அனைத்து விவசாயிகளின் ஆதரவை பெற முடியாமல் போனதற்காக நாட்டு மக்களிடம் அவர் மன்னிப்பு கேட்டுக் கொண்டார்.

இந்நிலையில் வேளாண் சட்டங்கள் ரத்து செய்யப்படுவது தங்களின் போராட்டத்திற்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாக விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

இது குறித்து பேசிய பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி, “பிரதமர் மோடியின் அறிவிப்பை வரவேற்கிறோம்.

விவசாயிகள் போராட்டத்தில் கலந்து கொண்டு உயிர் நீத்த விவசாயிகளின் குடும்பத்திற்கு தலா ரூ.5 லட்சம் இழப்பீடும், அந்தக் குடும்பங்களில் உள்ளவர்களில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்கப்படும் என அரசு ஏற்கெனவே அறிவித்துள்ளது.

வேளாண் போராட்டத்தில் உயிர் நீத்த பஞ்சாப் விவசாயிகளை கவுரவிக்கும் வகையில் நினைவுச் சின்னம் ஒன்று அமைக்கப்படும்.

விவசாயிகளின் துயர் துடைக்கும் வகையில் நிதி உதவித் திட்டங்கள் பிரதமர் மோடி உடனே அறிவிக்க வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.

Comments (0)
Add Comment