பொதுத் தொண்டுக்கான இலக்கணம் ஜீவா!

நூல் வாசிப்பு:

“ஜீவா இறந்தபோது (1963, சனவரி 18) பெரியார் எழுதினார்.

“பொது வாழ்க்கைக்கு வருவதற்கு முன் ஒருவருக்கு உள்ள அந்தஸ்து, பெருமை, வாய்ப்பு என்ன? அதை விட்டுச் செல்லும் கடைசி நிலையில் அவரது நிலைகள் என்ன? என்பது தான் உண்மையான பொதுத்தொண்டுக்கு அளவுகோல்.

இந்தச் சோதனைக்கு நிற்பவரது வாழ்க்கையே பொதுத்தொண்டுக்கான இலக்கணம்.

ஜீவாவின் மரணச்செய்தி கேட்டேன். திடுக்கிட்டேன்.

தமிழகத்திற்குப் பெரிய நஷ்டம். அவரது பிரிவால் வருந்தும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவியுங்கள்” என்று குறிப்பிட்டார்.

அதாவது ஜீவாவின் வாழ்க்கை தான் பொதுத்தொண்டுக்கு இலக்கணம் என்று பெரியார் குறிப்பிட்டார் என்றால், அவரை எந்த அளவுக்கு பெரியார் மதித்தார் என்பதை அறியலாம்.”

“இவர் தமிழர் இல்லை என்றால் எவர் தமிழர்” – ப.திருமாவேலன் எழுதி நற்றிணை பதிப்பகம் வெளியிட்டிருக்கிற இரண்டு தொகுப்பு நூல்களிலிருந்து ஒரு பகுதி.

நற்றிணை பதிப்பகம், கைபேசி : 044- 2848 1725

Comments (0)
Add Comment