கார்த்திகை தீப நாளில் தீபம் ஏற்றிய பின் ‘மாவளி’ சுற்றுதல் என்ற விளையாட்டு நிகழும்.
இது தமிழ்நாட்டுக்கே உரியதாகும்.
பனம் பூளை (எனப்படும் பூக்கள் மலரும் காம்பை) நன்கு காய வைத்து, காற்றுப்புகாமல் (பள்ளத்துக்குள் வைத்து) தீயிட்டுக் கரியாக்கி அதை நன்கு அரைத்துச் சலித்துத் துணியில் சுருட்டி கட்டுவர்.
பனை ஓலை மட்டைகள் மூன்றை எடுத்து அதன் நடுவில் கரித்தூள் சுருணையை வைத்து இருபுறமும் கட்டுவர்.
பிறகு அதை உரிபோல் நீண்ட கயிற்றில் கட்டுவர். துணிப்பந்தின் நெருப்பை வைத்து கனலை ஏற்படுத்துவர். கயிற்றை பிடித்து வட்டமாகவும் பக்கவாட்டிலும் சுற்றுவர். இருளில் அது தீப்பொறிகளைச் சிதறிக் கொண்டு ஒரு எரிநட்சத்திரம் வேகமாகச் சுழன்று ஓடுவது போல் காட்சியளிக்கும்.
அப்போது மாவளியோ மாவளி என்று சத்தமிடுவர். இது பார்ப்பதற்கு இனிய காட்சியாகும்.
கார் + தீகை → கார்த்தீகை → கார்த்திகை என்று மருவியது, அதாவது முருகன் பனைக்காட்டை விவசாயத்திற்காக கொளுத்திய நிகழ்வே இந்த பண்டிகை.
இதன் மூலம் வேட்டைச் சமூகமான தமிழர்களை முதன் முதலில் விவசாய சமூகமாக மாற்றிய நிகழ்வையே கார்த்திகையாக கொண்டாடுகிறோம்.
மாவளியோ மாவளி என்று சொல்லி சுழற்றி சுழற்றி எரி கங்குகளை கவன் எரிதல் முறையில் உயரமான இடத்திலிருந்து வீசி முற்காலத்தில் விவசாயத்திற்காக காட்டை கொளுத்துவர்.
முதலில் மானாவாரி பயிர்களான தினையும், மரவள்ளிக் கிழங்கையும் தான் முருகன் பயிரிட்டார்.
அப்படி திணைக் கதிர்களை பயிரிட்ட இடம் தான் கதிர் காமம். கார் என்பது மழைக் காலமாதலால் அந்த காலத்தில் பனைக்காட்டிற்கு தீவைத்த நிகழ்வை குறிக்கவே விளக்கேற்றுதல், சொக்கப்பனை கொளுத்துதல்.
அதன் பின் மாட்டின் மணியை உடலில் கட்டிக்கொண்டு பறை இசைத்து அந்த சொக்க பனையை சுற்றி வருவர் பின்னர் மாவளி சுற்றும் விளையாட்டும் நிகழும்.
அனைவரும் ஒருங்கே சுற்றும் போது அது காட்டைகொளுத்திய நிகழ்வை அழகாகக் காட்டும்.
முருகன் கோயில்களில் அதனால் தான் தேனும் தினை மாவும் பிரசாதமாக (வீ + சாற்றம் → பிரசாதம்) தருவர், அதில் செய்யப்பட்ட மாவிளக்கு படையலும் அந்த நிகழ்வை தக்கவைக்க செய்யும் செயல்.
இதே காலக்கட்டத்தில் தமிழர்களைப்போல அதே முறையில் வயல்களில் விளக்கேற்றி கொங்காணி பிகு கொண்டாடுவர் அசாமியார்கள்.
அவர்கள் நம்மைப்போல பொங்கலையும் அறுவடைத் திருநாள் பிகு என்று கொண்டாடுகின்றனர். அதைப்போலவே சித்திரை முதல் நாளை விவசாயத்தின் தொடக்கமாக கருதுகின்றனர்.
நாமும் அந்த சமயத்தில் தான் வயல்களில் பொன்னேறு பூட்டும் விழா எடுக்கிறோம்.
நன்றி: முகநூல் பதிவு