ஜெய்பீம் பட எதிர்ப்புகளைக் கைவிடுங்கள்!

அண்மையில் வெளியான ஜெய் பீம் திரைப்படம் பெரும் வரவேற்பைப் பெற்று வரும் நிலையில், ஒரு சில அமைப்பினரின் எதிர்ப்பையும் பெற்று வருகிறது.

இந்த நிலையில், ஜெய்பீம் படத்தை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பாராட்டியுள்ளதை வரவேற்றுள்ளதை ராஷ்ட்ரீய லோக் ஜனசக்தி கட்சி வரவேற்றுள்ளது.

இது தொடர்பாக ராஷ்ட்ரீய லோக் ஜனசக்தி கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் மணிமாறன் ஜி.வி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கை இதோ:

“ஜெய்பீம் படம் குறித்த தமிழக பாஜக தலைவரின் கருத்தை ராஷ்ட்ரீய லோக் ஜனசக்தி கட்சி வரவேற்கிறது..

அடித்தட்டு மக்களின் பிரச்னையை ஜெய் பீம் திரைப்படம் அற்புதமாக எடுத்துச் சொல்லியிருக்கிறது என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அவர்கள் தெரிவித்துள்ள கருத்தை ராஷ்ட்ரீய லோக் ஜனசக்தி கட்சி வரவேற்கிறது.

ஞானவேல் இயக்கத்தில், சூர்யா நடித்த ஜெய் பீம் படம் இருளர், குறவர் போன்ற அடித்தட்டு மக்களின் வாழ்க்கை முறையை எடுத்துக்காட்டும் கண்ணாடியாக உள்ளது. ஜெய் பீம் படம் பாமர மக்களின் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ள நிலையில், ஒரு தரப்பினரின் கண்டனத்தையும் பெற்றுள்ளது.

அரசியல் தலைவர்கள், திரைப் பிரபலங்கள் உட்பட பல தரப்பினரும் ஜெய் பீம் படத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இப்படம் வன்னியர் சமூக மக்களை தவறாக சித்தரிக்கும் விதமாக அமைந்திருப்பதாக வன்னியர் அமைப்புகள் சில கண்டனங்களை தெரிவித்து வருகின்றன.

இந்நிலையில், ஜெய்பீம் திரைப்படம் குறித்து பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை இவ்வாறு பேசியுள்ளார்.

                   

‘ஜெய்பீம் அற்புதமான திரைப்படம். அடித்தட்டு மக்களின் பிரச்னையை அற்புதமாக எடுத்துச் சொல்லியிருக்கிறது. ஜெய்பீம் திரைப்படத்தை பாஜக வரவேற்கிறது’ என்று தெரிவித்துள்ளார்.

தமிழக பாஜக தலைவரின் கருத்தை ராஷ்ட்ரீய லோக் ஜனசக்தி கட்சி வரவேற்கிறது.

வன்னியர் சமூக அமைப்புகளின் விமர்சனத்தை ஏற்று சில காட்சிகளை ஜெய் பீம் படக்குழுவினர் மாற்றி அமைத்துள்ளனர். இதனை அங்கீகரித்து ஜெய் பீம் படத்துக்கான எதிர்ப்புகளை கைவிடுமாறு அன்போடு கேட்டுக்கொள்கின்றோம்.

படைப்பாளிகளுக்கும் அவர்களின் படைப்பு சுதந்திரத்துக்கும் அனைவரும் மரியாதை கொடுக்க வேண்டும் என்றும், படைப்பாளிகளும் எந்த சமூகத்தினர் மனதும் சிறிதும் வருத்தமடையாத வகையில் எதிர்காலத்தில் கலைப் படைப்புகளை உருவாக்க வேண்டும் என்றும் ராஷ்ட்ரீய லோக் ஜனசக்தி கட்சி சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.

மணிமாறன் GV

தேசிய பொதுச் செயலாளர்

ராஷ்ட்ரீய லோக் ஜனசக்தி கட்சி

Comments (0)
Add Comment