உள்ளம் என்பது ஆமை; அதில் உண்மை என்பது ஊமை!

உள்ளம் என்பது ஆமை
அதில் உண்மை என்பது ஊமை
சொல்லில் வருவது பாதி
நெஞ்சில் தூங்கிக் கிடப்பது நீதி

                          (உள்ளம்…)

தெய்வம் என்றால் அது தெய்வம்
அது சிலை என்றால் வெறும் சிலை தான்
உண்டென்றால் அது உண்டு
இல்லை என்றால் அது இல்லை

                         (உள்ளம்…)

தண்னீர் தணல் போல் எரியும்
செந்தணலும் நீர் போல் குளிரும்
நண்பனும் பகை போல் தெரியும்
அது நாட்பட நாட்படப் புரியும்
நாட்பட நாட்படப் புரியும்

                        (உள்ளம்…)

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடிப்பில் 1962-ல் வெளிவந்த ‘பார்த்தால் பசி தீரும்’ படத்திற்காக உள்ளம் என்பது ஆமை என்ற இந்தப் பாடலை எழுதியவர் கவிஞர் கண்ணதாசன்.

Comments (0)
Add Comment