– ரசிகர்கள் உற்சாகம்
நடிகர் மோகன்லால் தொடர்ந்து மிகச்சிறந்த படங்களில் நடித்து வருகிறார். அடுத்தடுத்த பல வெற்றிப் படங்களையும் கொடுத்து வருகிறார். அவரது அடுத்தடுத்த படங்கள் ரிலீசுக்கு தயாராகி வருகின்றன. சில படங்கள் ஒடிடியிலும் ரிலீஸ் செய்யப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் பிரியதர்ஷன் இயக்கத்தில் அவர் நடித்துள்ள வரலாற்றுப் படமான ‘மரக்கார்’ இரண்டு ஆண்டுகளாக ரிலீசுக்கு தயாராக உள்ளது.
இந்தப் படத்தை ரிலீஸ் செய்ய மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் அனைத்தும் கொரோனா காரணமாக தள்ளிப் போனது.
இதையடுத்து படத்தை ஓடிடியில் ரிலீஸ் செய்ய பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. ஓடிடியில் படம் ரிலீஸ் செய்யப்பட உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது. ஆனால் அதிக பொருட்செலவில் உருவாக்கப்பட்டுள்ள இந்தப் படத்தை திரையரங்குகளில் காண ரசிகர்கள் விருப்பம் தெரிவித்தனர்.
இந்நிலையில், தற்போது இந்தப் படம் திரையரங்குகளில் ரிலீசாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
டிசம்பர் 2-ம் தேதி இந்தப் படம் திரையரங்குகளில் ரிலீசாகும் என படத்தின் நாயகன் மோகன்லால் ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.
படத்தில் மோகன்லாலுடன் கீர்த்தி சுரேஷ், பிரபு, அர்ஜூன், கல்யாணி பிரியதர்ஷன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
மலையாளத்தில் மிகுந்த பொருட்செலவில் எடுக்கப்பட்டுள்ள படம் என்ற பெருமையை இந்தப் படம் பெற்றுள்ளது.
மலையாளத்தில் சூப்பர் ஸ்டாராக விளங்கி வரும் மோகன்லால், தமிழில் விஜய்யுடன் நடித்த ஜில்லா படமும் சிறப்பான வரவேற்பைப் பெற்றிருந்தது.
படத்தின் டீசர், ட்ரெயிலர் உள்ளிட்டவை வெளியாகி மிகுந்த வரவேற்பை பெற்றுள்ள நிலையில், இந்திய அளவில் படத்தின் ரிலீசை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளனர்.