அருமை நிழல்:
*
‘செய்யும் தொழிலே தெய்வம்’ என்ற பட்டுக்கோட்டை வரிகளுக்குக் கண்கண்ட உதாரணம் நடிகர் திலகம் சிவாஜி.
திரையுலகிற்கு வருவதற்கு முன் நாடகத்தில் அவர் நடிக்காத பாத்திரங்களே இல்லை என்கிற அளவுக்கு நடித்திருக்கிறார்.
அதிலும் கணேசன் பெண் வேஷம் போட்டு மேடைக்கு வரும்போது, அந்த அழகான ஒப்பனையும், அபிநயிக்கிற விதமும் பார்க்கிறவர்களைக் கிறங்கடித்திருக்கின்றன. அந்த அளவுக்குத் தனக்குக் கிடைத்த பாத்திரத்தை நடிப்பால் நிரப்பியிருக்கிறார்.
துவக்கத்தில் திருச்சி சங்கிலியாண்டபுரத்தில் கணேசனும், (காகா) ராதா கிருஷ்ணனும் சேர்ந்து பாய்ஸ் கம்பெனி நாடகத்தில் போய்ச் சேர்ந்திருக்கிறார்கள். நடிக்கக் கிடைத்த நாடகம் ‘கட்டபொம்மன்’.
அதில் சிறுவனான கணேசனுக்குக் கொடுக்கப்பட்ட வேடம் ஆங்கிலேயப் படைச் சிப்பாய். பின்னாளில் இதை நினைவு கூர்ந்திருக்கிறார் வீரபாண்டிய கட்டபொம்மனாகத் திரையில் கர்ஜித்த சிவாஜி.
படம்: 1963- ல் கிருஷ்ணன் பஞ்சு இயக்கத்தில் வெளியான குங்குமம் திரைப்படத்திற்காக சிவாஜி ஏற்ற பெண் வேடம்!