யாரடா மனிதன் இங்கே
கூட்டிவா அவனை இங்கே
இறைவன் படைப்பில்
குரங்குதான் மீதி இங்கே
(யாரடா மனிதன்…)
மனிதரில் நாய்கள் உண்டு
மனதினில் நரிகள் உண்டு
மனிதரில் நாய்கள் உண்டு
மனதினில் நரிகள் உண்டு
பார்வையில் புலிகள் உண்டு
பழக்கத்தில் பாம்பும் உண்டு
பார்வையில் புலிகள் உண்டு
பழக்கத்தில் பாம்பும் உண்டு
நாயும் நரியும் புலியும் பாம்பும்
வாழும் பூமியிலே
மானம் பண்பு ஞானம் கொண்ட
மனிதனை காணவில்லை
(யாரடா மனிதன்…)
சிரிப்பினில் மனிதன் இல்லை
அழுகையில் மனிதன் இல்லை
சிரிப்பினில் மனிதன் இல்லை
அழுகையில் மனிதன் இல்லை
உள்ளத்தில் மனிதனில்லை
உறக்கத்தில் மனிதனுண்டு
வாழும் மிருகம் தூங்கும் தெய்வம்
நடுவே மனிதனடா
எங்கோ ஒருவன் இருந்தால் அவனை
உலகம் வணங்குதடா…!
(யாரடா மனிதன்…)
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடிப்பில் 1968 ல் வெளிவந்த ‘லட்சுமி கல்யாணம்’ திரைப்படத்தில் இடம்பெற்ற இப்பாடலை எழுதியவர் கவியரசர் கண்ணதாசன்.
இசை – எம்.எஸ்.விஸ்வநாதன். குரல் – டி.எம்.சௌந்தராராஜன்.