உங்கள் நேரத்தையும் நீங்கள் டெபாசிட் செய்யலாம்!

சுவிஸ் பேங்கில் பணம் டெப்பாசிட் செய்து தேவைப்படும்போது எடுக்கலாம் என்பது உலக மக்கள் அனைவருக்கும் தெரியும்.

ஆனால் சுவிஸர்லாந்து தேசத்தில் காலத்தையும் டெப்பாசிட் செய்து தேவைப்படும்போது எடுக்கலாம் என்பது எத்தனை பேருக்கு தெரியும்.

ஆம், சுவிஸர்லாந்து தேசத்தில் ‘கால வங்கி’ (Time Bank) என்று முதியோர் பென்ஷன் திட்டத்தை அந்த நாட்டு அரசாங்கம் (Swiss Federal Ministry of Social Security) நடத்துகிறது.

இந்த ‘கால வங்கி’யில் நாம் இளமையாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்போது நம்முடைய நேரத்தை டெப்பாசிட் செய்யலாம்.

ஆச்சிரியமாக இருக்கிறதா?

ஆம், நாம் ஆரோக்கியமாக இருக்கும் போது Swiss Federal Ministry of Social Securityயில் கணக்கு ஆரம்பித்து நம்முடைய Free Timeயை டெப்பாசிட் செய்யலாமாம். பிறகு நமக்கு தேவைப்படும் போது அந்த Timeயை எடுத்துப் பயன்படுத்திக் கொள்ளலாமாம்.

அங்கு வேலை நிமித்தம் சில வருடங்கள் சென்ற நண்பர் ஒருவரின் வார்த்தைகளில் இதைப் புரிந்துகொள்வோம்.

நான் ஸ்விட்ஸர்லாந்தில் தங்கி இருந்தபோது ஒரு வீட்டை வாடகைகக்கு எடுத்திருந்தேன். அந்த வீட்டின் உரிமையாளர் கிரிஸ்டியான 67 வயதான ஓய்வு பெற்ற ஆசிரியை. தேவையான அளவுக்கு பென்ஷன் வாங்குபவர்.

அதற்கு மேல் நான் கொடுக்கும் வீட்டு வாடகை வேறு. இதை வைத்து அவர் நினைக்கும் விதம் எந்த பண கஷ்டமும் இல்லாமல் வாழ்க்கை நடத்த முடியும்.

ஆனால் அவர் தினமும் ஒரு 87 வயதான முதியவர் வீட்டிற்கு சென்று வேலை செய்கிறார். அதாவது அவருக்கு தேவைப்படும் உதவிகளைச் செய்கிறார். அவருடன் உரையாடுகிறார்.

அவருக்கு தேவைப்படும்போது மருத்துவர்களுடன் தொடர்பு கொள்ளவும், மருந்துகள் வாங்கவும் உதவி செய்கிறார். சுருக்கமாகச் சொன்னால், தினமும் இரண்டு மணிநேரம் அந்த முதியவர் வீட்டில் வேலை செய்கிறார்.

நான் கிரிஸ்டியனாவிடம், “அந்த முதியவர் உங்கள் உறவினரா? இல்லை அவருக்கு சம்பளத்திற்காக வேலை செய்கிறீர்களா?” என்று கேட்டேன்.

“இரண்டுமில்லை, அந்த முதியவர் என் உறவினருமில்லை, நான் அவரிடம் சம்பளமும் வாங்கவில்லை” என்ற அவரது பதில் எனக்கு ஆச்சிரியத்தை அளித்தது.

பிறகு அவரே அதை விளக்கினார்.

“நான் இப்பொழுது ஆரோக்கியமாக இருக்கிறேன். என்னால் இந்த மாதிரி வேலைகளை செய்ய முடிகிறது. எனவே இந்த மாதிரி வேலைகளை செய்து என்னுடைய ‘நேரத்தை’ சேமித்து வைத்துக் கொள்கிறேன்.

நாளை எனக்கு இந்த ‘நேரம்’ தேவைப்படும்போது எடுத்து உபயோப்படுத்திக் கொள்வேன். நான் Swiss Federal Ministry of Social Securityயில் பதிவு செய்துள்ளேன். நான் அந்த முதியவருக்கு செலவிடும் நேரங்கள் என்னுடைய கணக்கில் வரவு வைக்கப்படும்.

எப்பொழுது எனக்கு உதவி தேவைப்படுகிறதோ, அப்பொழுது Swiss Federal Ministry of Social Securityக்கு சொன்னால் அவர்கள் யாரையாவது உதவிக்கு அனுப்பி என் கணக்கில் உள்ள ‘நேரத்தை’ செலவு செய்வார்கள்” என்று விளக்கமளித்தார்.

மேலும் அவர்  இது பற்றிச் சொல்லும் போது, “இத்திட்டத்தில் கணக்கு தொடங்க விரும்புபவர்கள் ஆரோக்கியமாகவும், சேவை மனபான்மை உடையவர்களாகவும் இருப்பது அவசியம்.

தினமும் உதவி தேவைப்படும் முதியவர்களை அக்கரையுடன் கவனித்துக் கொள்ள வேண்டும்.

இப்படி அவர்கள் செலவிடும் ‘நேரம்’ அரசு மெயின்டெய்ன் பண்ணும். அவர்கள் கணக்கில் வரவு வைக்கப்படும்.

ஒவ்வொரு வருட முடிவிலும் இந்த ‘நேர வங்கி’ (Time Bank) எத்தனை மணி நேரம் வரவு வைக்க பட்டுள்ளது என்று கணக்கிட்டு “நேர சேமிப்பு அட்டை” (Time Bank Card) வழங்குவார்களாம்.

நமக்குத் தேவைப்படும் போது அந்த அட்டையைப் பயன்படுத்தி நம்முடைய நேரத்தை எடுத்துக் கொள்ளலாம்.

அப்படி நாம் நம் நேரத்தை எடுக்க நாம் ரிக்வெஸ்ட் கொடுக்கும் போது, அவர்கள் நமக்கு உதவி செய்ய ‘நேர சேமிப்பாளர்கள்’ யாரையாவது அனுப்பி வைப்பார்கள்.

இத்திட்டத்தினால், நாமும் எந்தவித தாழ்வு மனப்பான்யின்றி அவரிடம் உதவியை பெற்றுக் கொள்ள முடியும்.” என்று முடித்தார்.

ஆனாலும் என் மனதில் இத்திட்டத்தின் செயல்பாடுகளில் சத்தேகங்கள் இருக்கதான் செய்தன. அடுத்த சில நாட்களில் இதை சுத்தமாக மறந்தும் விட்டேன்.

ஒரு நாள் நான் அலுவலம் செல்ல தயாராகிக் கொண்டிருக்கும் பொழுது, கிரிஸ்டியானா என்னை இன்டர்காமில் அவசரமாக அழைத்தார்.

அங்கு போனால், கீழே விழுந்து அவருக்கு கணுக்காலில் அடிபட்டிருந்தது.

நான் அலுவலகத்திற்கு பர்மிஷன் சொல்லிவிட்டு அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றேன்.

கீழே விழுந்த வேகத்தில் கணுக்கால் உடைந்திருப்பதாகவும் சில நாட்கள் படுக்கையில்தான் இருக்க வேண்டும் என்று டாக்டர்கள் சொல்லி விட்டனர்.

நான் அடுத்தநாள் முதல் “Work at Home” வாங்கி அவருக்கு உதவி செய்வதாக சொல்லிவிட்டு அலுவலகம் சென்று விட்டேன்.

மாலை வீடு திரும்பியதும், அவரை கவனித்து கொள்ள ஒரு இளைஞர் வந்திருப்பதை கவனித்தேன்.

அவர் கணக்கில் தேவையான அளவு ‘நேரம்’ வரவுவைக்கப் பட்டிருந்தாகவும், அதை எடுத்துப் பயன்படுத்த ரிக்வெஸ்ட் கொடுத்ததால், அரசு இந்த இளைஞரை அனுப்பி இருந்தாகவும் தெரிவித்தார்.

என்ன அருமையான திட்டம், இந்த ‘நேர சேமிப்பு’ திட்டம் என்பது அப்போதுதான் எனக்கு புரிந்தது.

இன்று ஸ்விட்ஸர்லாந்து தேசத்தில் இந்த ‘நேர வங்கி’ திட்டம், முதியவர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும் அருமையான திட்டமாக திகழ்கிறது.

இது நாட்டின் பென்ஷன் செலவுகளை குறைப்பது மட்டுமல்லாமல் ஒரு சமூக தீர்வாகவும் செயல்பாட்டில் உள்ளது.

பெரும்பான்மையான ஸ்விஸ் மக்கள் இந்த முதியோர் நலத்திட்டத்தை ஆதரித்து தங்கள் பங்களிப்பை வழங்குகிறார்கள்.

மெஜாரிட்டி ஸ்விஸ் மக்கள் இத்திட்டத்தில் பங்களிக்க, கணக்கு தொடங்க விரும்புவதாக ஸ்வீட்ஸர்லாந்து தேசத்து சர்வே ஒன்று சொல்கிறது.

ஸ்விஸ் அரசும் இந்த ‘நேர வங்கி’ திட்டத்தை ஆதரிக்க சட்டமியற்றி உள்ளது.

நாமும் நமது தேசத்தில் இந்தத் திட்டத்தைத் தொடங்கி நமது நாட்டு முதியவர்களுக்கு உதவி செய்யலாமே.

நன்றி: முகநூல் பதிவு

Comments (0)
Add Comment