எம்.ஜி.ஆர், திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கிய ஆரம்ப காலகட்டங்களில் சில படங்களில் வில்லனாக நடித்திருக்கிறார் என்பது ரசிகர்களுக்கு தெரிந்ததுதான்.
அப்படி அவர் வில்லனாக நடித்த படங்களில் ஒன்று ‘பணக்காரி’. இந்தப் படத்துக்குப் பிறகுதான் எம்.ஜி.ஆர் அந்த அதிரடி முடிவை எடுத்தார்.
ரஷ்ய எழுத்தாளர் லியோ டால்ஸ்டாயின் ‘அன்ன கரீனினா’ நாவலை 1935 ஆம் ஆண்டு அதே பெயரில் திரைப்படமாக எடுத்தார்கள் ஹாலிவுட்டில்.
கிளாரன்ஸ் பிரான் இயக்கத்தில் உருவான இந்தப் படத்தில் பிரபல நடிகை கிரெட்டா கார்போ (Greta Garbo) அன்ன கரீனீனாவாக நடித்திருப்பார். அவர் கணவராக பிரட்ரிக் மார்ச் நடித்திருப்பார்.
பல்வேறு பட விழாக்களில் விருதுகளைப் பெற்ற இந்தப் படம் ஹாலிவுட்டில் சூப்பர் ஹிட்.
கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் இயக்கிய இந்தப் படத்தில் சித்தூர் வி.நாகையா ஹீரோவாக நடித்தார். (இந்த கே.எஸ்.கோ-வும் ‘கற்பகம்’, ‘பணமா பாசமா’, ‘குலவிளக்கு’, ‘குறத்தி மகன்’ உட்பட பல படங்களை இயக்கிய பிரபல இயக்குநர் கே.எஸ்.கோபாலகிருஷ்ணனும் ஒருவரல்ல. அது வேறு கே.எஸ்.கோ).
படத்தில் நாகையா மனைவியாக டி.ஆர்.ராஜகுமாரி நடித்தார். நாகையாவின் நண்பராக ராணுவ வீரர் வேடத்தில் எம்.ஜி.ஆர். மற்றும் ஜாவர் சீதாராமன், டி.எஸ்.துரைராஜ், கே.ஏ.தங்கவேலு, கே.ஆர்.செல்லம், டி.எஸ்.ஜெயா, சி.வி.வி.பந்துலு, மங்களம் உட்பட பலர் நடித்திருந்த இந்தப் படத்துக்கு எஸ்.வி.வெங்கட்ராம் இசை அமைத்திருந்தார்.
பாபநாசம் சிவன், தஞ்சை ராமையா தாஸ் உட்பட சிலர் பாடல்கள் எழுதி இருந்தனர். அந்தக் கால வழக்கப்படி இந்தப் படத்திலும் ஏகப்பட்ட பாடல்கள்.
படத்தில் எம்.ஜி.ஆர் வில்லனாக நடித்தார். 1953 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தப் படத்தில் எஸ்.எஸ்.வாசன் துணை இயக்குநராகப் பணியாற்றினார் என்கிறார்கள்.
கதைப்படி தனது மனைவி டி.ஆர்.ராஜகுமாரியை நண்பன் எம்.ஜி.ஆருக்கு அறிமுகப்படுத்துகிறார் நாகையா. அவர் அழகில் மயங்கி ஆசைக் கொள்ளும் எம்.ஜி.ஆர், அடைய திட்டம் போடுகிறார்.
அதற்காக கணவன், மனைவியைப் பிரித்து ராஜகுமாரியை அடைய நினைக்கிறார். அது நடந்ததா, அதற்காக என்ன மாதிரியான விலையை எம்.ஜி.ஆர் கொடுக்கிறார் என்பதுதான் படத்தின் கதை.
இந்த விஷயம் தெரியவந்த பிறகுதான் எம்.ஜி.ஆர் அந்த முடிவை எடுத்தார். அது, இனி வில்லனாக நடிப்பதில்லை என்று!
இந்தப் படம் ரிலீஸுக்கு இரண்டு வருடங்களுக்கு முன் ‘பிச்சைக்காரி’ என்ற படம் வெளியாகி சூப்பர் ஹிட்டானது.
அதனால் ‘பிச்சைக்காரி’யை வாங்கிய விநியோகஸ்தர்கள் எல்லாம் பணக்காரங்க ஆகிட்டாங்க, ‘பணக்காரி’ய வாங்கியவங்க எல்லாம் பிசைக்காரனாகிட்டாங்க’ என்று அப்போது கிண்டலாக பேசுவது உண்டு.
-அலாவுதீன்