ரயில்வே காவல்துறை தீவிர கண்காணிப்பு
தொழில் நகரமாக விளங்கும் கோவைக்குப் பல்வேறு வெளிமாவட்ட மக்கள் மட்டுமின்றி, வெளி மாநிலத்தவரும் அதிகமாக வந்து செல்கின்றனர்.
இவர்கள் போக்குவரத்திற்கு அதிகளவில் ரயிலை பயன்படுத்துகின்றனர். இதன் காரணமாக ரயில்களில் போதைப் பொருட்கள் கடத்தலும் அதிகம் நடந்து வருகிறது.
இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன், நைஜீரிய வாலிபர் ஒருவர் ரூ.1.25 கோடி போதைப் பொருள் கடத்திய போது கைது செய்யப்பட்டார்.
இதேபோல், பல்வேறு வெளிமாநிலங்களில் இருந்து கஞ்சா, குட்கா, பான்பராக் கடத்துவதும் அதிகரித்துள்ளது.
இதையடுத்து, ரயில்வே காவல் துறையினர் போதைப் பொருட்கள் கடத்தல் குறித்த கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர்.
இது குறித்து விளக்கமளித்த ரயில்வே காவல்துறையினர்,
“இப்போது கஞ்சா கடத்தலும் அதிகரித்துள்ளது. ரோந்து பணிகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. பயணிகளின் உடமைகள், சோதனைக்குப் பின்னரே அனுமதிக்கப்படுகின்றன. சந்தேகத்துக்கு இடமான வகையில் வரும் நபர்களிடம், தீவிர சோதனை நடத்தப்படுகிறது” எனக் கூறினர்.