– பருவநிலை மாற்றம் குறித்து ஐ.நா. பொதுச் செயலாளரின் எச்சரிக்கை
பருவநிலை மாற்றம் குறித்த ஐ.நாவின் 26-வது உச்சி மாநாடு ஸ்காட்லாந்தில் உள்ள கிளாஸ்கோ நகரில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
நவம்பர் 12ம் தேதி வரை நடைபெறும் இந்த மாநாட்டில், இந்தியப் பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உள்ளிட்ட 200 நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர்.
இதன் முதல்நாள் கூட்டத்தில் பேசிய ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெர்ஸ்,
“புகை வடிவ எரிபொருட்களுக்கு அடிமையாகி இருக்கிறோம். நிலத்தைத் தோண்டி எரிபொருள் எடுப்பதை எடுக்காவிட்டால் அது நம்மை நிறுத்திவிடும்.
எரிபொருளுக்காக ஆழமாக நாம் பூமியை தோண்டிக் கொண்டே இருக்கிறோம். இதன்மூலம் நமது சவக்குழியை நாமே தேடிக் கொண்டு இருக்கிறோம்” என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.