“தனது தாய்மொழியை நேசிக்காத, தாய் மொழியில் பேசுவதை கொச்சையாக, கேவலமாக நினைக்கும் ஒரு தலைமுறை ஒரு போதும் வாழ்ந்ததாக வரலாற்றில் குறிப்பே இல்லை. இது சத்தியம்”
எங்கே நாம் காயப்படுகிறோமோ அங்கே தான் நம் கல்லூரி தொடங்குகிறது.
எல்லோருக்கும் வாழ்க்கையில் அவமானம், தலைகுனிவு கண்டிப்பாக ஏற்படும். அது எப்போதெல்லாம் நடக்கிறதோ அப்போதெல்லாம் நாம் பாடம் கற்கிறோம்.
நம்மை எவன் அவமானப்படுத்துகிறானோ அவனை பின்னாளில் எப்படிப் பழி வாங்க வேண்டுமென்றால் துப்பாக்கியால் சுட்டு அல்ல, கல்லால் அடித்து அல்ல, ஒரு நாள் அவன் நம் முன்னாலே நின்று,
“ஆஹா நாம இவரை தாழ்வாக நினைத்தோமே. ஆனால், இவர் இவ்வளவு உயர்ந்து நிற்கிறாரே” என்று எண்ணி பார்க்கும் அளவுக்கு நாம் சிகரமாக சிறந்து நிற்கின்ற நிலையே அவருக்கான பதிலடி.
– வலம்புரி ஜான்