ராணுவ அகாடமியில் பெண்கள்!

மஹாராஷ்டிரா மாநிலம் புனேயில் உள்ள தேசிய ராணுவ அகாடமியில் பயிற்சி முடித்தவர்களுக்கான பாராட்டு விழா நடைபெற்றது.

இந்த விழாவில் கலந்து கொண்டு பேசிய ராணுவத் தலைமை தளபதி நரவானே, “தேசிய ராணுவ அகாடமியில் பல ஆண்டுக்கு முன் நானும் பயிற்சி முடித்தேன். அப்போது ராணுவத்

தலைமை தளபதியாக, இதே அகாடமியில் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொள்வேன் என நினைத்து பார்க்கவில்லை.

ராணுவம் என்றால் ஆண்களுக்கானது என்பது மறைந்து வருகிறது. தேசிய ராணுவ அகாடமியில் பெண்களும் சேர்க்கப்பட உள்ளதை, ராணுவத்தில் பாலின சமத்துவத்துக்கான முதல் படியாக கருதுகிறேன். வீரர்களை விட வீராங்கனையர் சிறப்பாக செயல்படுவர் என்ற நம்பிக்கை உள்ளது.

இன்னும் 40 ஆண்டுகளில் ராணுவ தலைமை தளபதியாக பெண் ஒருவர் இருப்பார் என நம்புகிறேன். ராணுவ அகாடமியில் வீரர்களுக்கு அளிக்கப்படும் பயிற்சியைப் போலவே வீராங்கனையருக்கும் அளிக்கப்படும்; இதில் எந்த மாற்றமும் இருக்காது.

ராணுவத்தில் பணியாற்றும் பெருமை, யாருக்கும் கிடைத்து விடாது. தேசத்துக்காகவும், மக்களுக்காகவும் பணியாற்றுவது நமக்கு கிடைத்த பாக்கியம்” எனக் கூறினார்.

Comments (0)
Add Comment