பகுத்தறிவு பிறந்ததெல்லாம் கேள்விகள் கேட்டதனாலே!

நினைவில் நிற்கும் வரிகள்:

***

ஏன் என்ற கேள்வி இங்கு
கேட்காமல் வாழ்க்கை இல்லை
நான் என்ற
எண்ணம் கொண்ட
மனிதன் வாழ்ந்ததில்லை 

பகுத்தறிவு பிறந்ததெல்லாம்
கேள்விகள் கேட்டதனாலே
உரிமைகளை பெறுவதெல்லாம்
உணர்ச்சிகள் உள்ளதனாலே 

                              (ஏன் என்ற…)

ஓராயிரம் ஆண்டுகள்
ஆகட்டுமே

நம் பொறுமையின்
பொருள் மட்டும்
விளங்கட்டுமே

வருங்காலத்திலே
நம் பரம்பரைகள் நாம்
அடிமை இல்லை என்று
முழங்கட்டுமே

                             (ஏன் என்ற…)

நீரோடைகள்
கோடையில் காய்ந்திருக்கும்
மழைகாலத்தில் வெள்ளங்கள்
பாய்ந்திருக்கும் 

நம் தோள்
வலியால் அந்த நாள்
வரலாம் அன்று ஏழை
எளியவர்கள் நலம்
பெறலாம்

முன்னேற்றம்
என்பதெல்லாம் உழைப்பவர்
உழைப்பதனாலே

கடமைகளை
புரிவதெல்லாம் விடுதலை
வேண்டுவதாலே

                        (ஏன் என்ற…)

– 1965-ம் ஆண்டு எம்ஜிஆர் நடித்து வெளிவந்த ‘ஆயிரத்தில் ஒருவன்’ திரைப்படத்தில் இடம்பெற்ற இப்பாடல் வரிகளை எழுதியவர் கவிஞர் வாலி.

Comments (0)
Add Comment