வாலி எனும் குசும்புக்காரர்!

கவிஞர் வாலியின் பிறந்த தினத்தையொட்டிய பதிவு.

ரஜினியின் படத்தில் பாடல் எழுதுவதற்காக, கவிஞர் வாலி அவர்கள் ரஜினியின் அலுவலகத்திற்குச் சென்று அவருடன் பேசிக்கொண்டு இருக்கிறார்.

அப்போது, ரஜினியின் உதவியாள் அவரிடம் வந்து காதில் கிசுகிசுக்கிறார்.

உடனே ரஜினி அவர்கள் கவிஞர் வாலியிடம் “இதோ ஒரு நிமிடத்தில் வருகிறேன்“
என்று சொல்லிவிட்டு வெளியில் செல்கிறார்.

வெளியே வைரமுத்து ரஜினியைப் பார்க்க வந்து வாசலில் காத்துக் கொண்டு இருக்கிறார்.

ரஜினிக்குக் கொஞ்சம் சங்கடம். வைரமுத்து அவர்களை அலுவலகத்திற்குள் அழைத்துச் செல்வதா வேண்டாமா என்ற குழப்பம்.

என்ன செய்வது என்று தெரியாமல் நீங்கள் இங்கேயே இருங்கள். இதோ ஒரு நிமிடத்தில் வந்து விடுகிறேன் என்று ரஜினி வைரமுத்துவிடம் சொல்லி விட்டு, திரும்பவும் வாலி இருந்த அறைக்குள் வருகிறார்.

வந்தவர் கவிஞர் வாலியிடம் ஐயா, இன்று சிங்கமும், புலியும் நேருக்கு நேர் சந்தித்துக் கொள்ள போகிறார்கள் என்று சொல்கிறார்.

அதைக்கேட்ட வாலி உடனே, யாரு? வைரமுத்து வந்திருக்கிறாரா? என்று கேட்கிறார்.

ரஜினியும் ஆமாம் ஐயா என்று பதில் சொல்கிறார்.

உடனே கவிஞர் வாலி கேட்கிறார், ஆமாம்… எங்களில் யார் சிங்கம்? யார் புலி? என்று.

ரஜினிக்கு மிகவும் தர்மச்சங்கடமாகிவிட்டது.

ஐயா, அது வந்துங்க… நீங்க ரெண்டு பேருமே… என்று இழுக்கிறார் ரஜினி.

அவரின் தயக்கத்தைப் புரிந்து கொண்ட ஐயா வாலி, இதில் என்ன தயக்கம்?
இங்கே நான் தான் சிங்கம் என்று மிகச் சாதாரணமாக சொல்கிறார்.

ரஜினி, அவர் சொன்னதற்கு என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் அசடாக சிரிக்கிறார்.

அவரைப் பார்த்த கவிஞர் வாலி, என்ன ரஜினி?

என்னை நானே சிங்கம்ன்னு சொன்னது ஏன் என்று தெரியவில்லையா? -என்று கேட்கிறார்.

ரஜினி இல்லை என்று தலையாட்டுகிறார்.

உடனே கவிஞர் வாலி, இங்கே எனக்குத் தானய்யா தாடி இருக்கிறது என்கிறார்.
தன் தாடியை நீவி விட்டுக்கொண்டே…

அவர் சொன்னதின் பொருளைப் புரிந்து கொண்ட ரஜினி வியந்து ரசித்துச் சிரிக்கிறார்.

ஆம் வாலி எனும் அம் மாகவிஞன் ஓர் சமயோசித பன்முகத்தார்!

○○○

ஒரு பட்டிமன்றம் ஐயா கவியரசர் கண்ணதாசனும் ஐயா வாலி அவர்களும்
விழாவுக்கு தலைமை தாங்குகிறார்கள்.

தலைப்பு,
கண்ணகி மேலா?
மாதவி மேலா?

விழா தொடங்குவதற்கு முன் இருவரும் மேடை கீழே அமர்ந்து பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

கவியரசர் வாலியிடம் கேட்கிறார்… என்ன வாலி நீ என்ன நினைக்கிறே?

கண்ணகி மேலா? மாதவி மேலா?

இங்கே பாருங்கள் ஐயா வாலி அவர்களின் ஜாலத்தை,

கவிஞரே, கண்ணகி மேலுமில்லை. மாதவி மேலுமில்லை. இருவருமே (Female) பெண்கள் என்கிறார்.

கவியரசர் பெருங்குரலெடுத்து சிரிக்கிறார். யோவ் வாலி, பெயருக்கு ஏற்றார் போல்
உன் குரங்குத்தனம் உன்னை விட்டுப் போகலையா ..

○○○

இது பெரியார் மண் என்றே விடாபிடியாய் பேதலித்த காலம் அது.

அதற்கான பதில் சூட்சமத்தை இங்கே இப்படி பாடி வைத்தார் ஐயா வாலி.

உன்னை கற்பனை கற்சிலை என்று சொல்பவர்கள் சொல்லட்டும்
அது அவர்களது உரிமை.

ஆனால், உன்னை மறக்காமல் இருப்பது எனது கடமை.

என தன் ஆன்மீக நம்பிக்கையை தூக்கி பிடித்தவர் ஐயா வாலி அவர்கள்.

ஐயா கவியரசரை முதன்முதல் சந்திக்க நேர்ந்த போது,

நான் ஒரு தீவிர ஆஸ்திகன். நீங்களும் இப்படி ஆஸ்திகனா மாறிவிட்டதில் எனக்கு ரொம்ப சந்தோஷம் என்று வாலி ஐயா கூற..,

நான் எப்பவுமே ஆஸ்திகன்தான். ஜுபிடர் பிக்சர்சில் இருக்கிறபோது, விபூதி குங்குமத்தோடுதான் இருப்பேன் என்றாராம் ஐயா கண்ணதாசன்.

நாத்திக வாதம் என்பது அரசியல் நோக்கங்கொண்டது என்பதையும், உள்மனத்தின் உண்மையான உணர்வல்ல என்பதையும் உணர்ந்தேன் என்பது ஐயா கண்ணதாசனின் வாக்கு மூலமாகும்.

மூன்று வருடங்கள் மட்டுமே நாத்திகராக இருந்தேன், போராட்டங்களில் பங்கு கொண்டு பின்னர் ஆத்திகரானேன்.

நாத்திகர் ஆனதுக்குக் காரணமாக அதில் இருந்த போலித்தனமான பெருமை, அப்போது நாத்திகராக இருந்ததால் சமூகத்தில் கிடைத்த மதிப்பு போன்றவற்றில் மயங்கி நாத்திகரானதானதாகவும் குறிப்பிட்டிருக்கிறார்.

– நன்றி: முகநூல் பதிவு

Comments (0)
Add Comment