சானிடைசர் பயன்படுத்திவிட்டு பட்டாசு வெடிக்கக் கூடாது!

  • தீபாவளி பண்டிகை நெருங்கும் நிலையில், சென்னை புறநகர், காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டம் மட்டுமல்லாமல் பிற மாவட்டங்களில் இருந்தும், மக்கள் குடும்பத்தினருடன் தீபாவளி ‘ஷாப்பிங்’ செய்ய சென்னை வந்து செல்கின்றனர்.

இதன்காரணமாக கடந்த 24-ம் தேதியில் இருந்து, சென்னை வரும் புறநகர் மின்சார ரயில்கள் மற்றும் எக்ஸ்பிரஸ் ரயில்களில் கூட்டம் அதிகம் உள்ளது.

மின்சார ரயில்களில், கூட்ட நெருக்கடியால் அசம்பாவிதம் ஏற்படாமல் தவிர்க்கவும், பட்டாசு எடுத்து செல்வதை தடுக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அந்த வகையில், நாளை முதல் நவம்பர் 5-ம் தேதி வரை சென்னை புறநகர் மின்சார ரயில்களிலும், விழுப்புரம், அரக்கோணம், கும்மிடிப்பூண்டிக்கு இயக்கப்படும் ரயில்களிலும், கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

புறநகர் ரயில் நிலையங்களில் 24 மணி நேரமும் ரயில்வே பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியில் இருப்பர்.

ரயில் நிலையங்களில், எத்தனை நுழைவாயில் இருந்தாலும், அத்தனை வாயில்களிலும் ரயில்வே பாதுகாப்பு படையினர், பயணியரின் உடைமைகளை சோதனை செய்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதேபோல், பட்டாசு எடுத்துச் சென்றால் 3 ஆண்டு சிறை தண்டனை, 1,000 ரூபாய் அபராதம் செலுத்த நேரிடும் என பயணியருக்கு விழிப்புணர்வு வழிகாட்டுதல் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பயணத்தின்போது, பாதுகாப்பு குறைபாடு இருந்தால், ரயில்வே பாதுகாப்புப் படை உதவி மையத்துக்கு 139 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

இத்துடன், ரயில்வே காவல் உதவி மையத்துக்கு 1512 என்ற எண்ணிலும், 99625 00500 என்ற மொபைல் போன் எண்ணிலும் 24 மணி நேரமும் தொடர்பு கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே சானிடைசர் பயன்படுத்திவிட்டு பட்டாசு வெடிக்கக் கூடாது என சுகாதாரத் துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

முழுவதும் வெடிக்காத பட்டாசுகளை தண்ணீர் ஊற்றி அணைக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

Comments (0)
Add Comment